Singer : S. Janaki

Music by : Ilayaraja and Gangai Amaran

Female : Naal nalla naal pudhu nilaa poochchoodinaal
Naal nalla naal pudhu nilaa poochchoodinaal
Uravugal pirantha naal ulagamae marantha naal
Karuvaraiyil deepam yaetrinaal uruginaal

Female : Naal nalla naal pudhu nilaa poochchoodinaal

Female : Kaamadevan andru un mael
Pulli vaiththathenna
Kaalamennum devan un mael
Kangal vaiththathenna
Kanda kadhaiyai kattil sollumae
Nee solli vaikka vaendaamaa

Female : Ini thottilittu thaalaattu
Aa….aa…..aa…..aaa…..
Thottilittu thaalaattu
Marupadiyum kattilittu paaraattu
Nalam yaavum vanthu soozhga
Malar manjal dhinam vaazhga

Female : Indha naal nalla naal pudhu nilaa poochchoodinaal

Female : Karuvil dheepam yaetri
Naanae kooyilaagi ponaen
Thaaimai kondathaalae
Indru rendu jeevanaanaen
Vaanavillilae minnalgalinaal
Thottil katta maattaeno

Female : Intha poovukkulae poraattaam mm….
Aa….aa….aa….aaa….
Poovukkulae poraattaam
Adi vayitril chinna chinna thaerottam
Ival vaazhvae thavamaagum
Varum pillai varamaaagum

Female : Indha naal nalla naal pudhu nilaa poochchoodinaal
Naal nalla naal pudhu nilaa poochchoodinaal

Female : Uravugal pirantha naal ulagamae marantha naal
Karuvaraiyil deepam yaetrinaal uruginaal

Female : Naal nalla naal pudhu nilaa poochchoodinaal

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்

பெண் : நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்
நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்
உறவுகள் பிறந்த நாள் உலகமே மறந்த நாள்
கருவறையில் தீபம் ஏற்றினாள் உருகினாள்

பெண் : நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்

பெண் : காமதேவன் அன்று உன் மேல்
புள்ளி வைத்ததென்ன
காலமென்னும் தேவன் உன் மேல்
கண்கள் வைத்ததென்ன
கண்ட கதையை கட்டில் சொல்லுமே
நீ சொல்லி வைக்க வேண்டாமா

பெண் : இனி தொட்டிலிட்டு தாலாட்டு….
ஆ……ஆ……ஆ….ஆஆ….
தொட்டிலிட்டு தாலாட்டு….
மறுபடியும் கட்டிலிட்டு பாராட்டு
நலம் யாவும் வந்து சூழ்க
மலர் மஞ்சள் தினம் வாழ்க

பெண் : இந்த நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்

பெண் : கருவில் தீபம் ஏற்றி
நானே கோயிலாகி போனேன்
தாய்மை கொண்டதாலே
இன்று ரெண்டு ஜீவனானேன்
வானவில்லிலே மின்னல்களினால்
தொட்டில் கட்ட மாட்டடேனோ

பெண் : இந்த பூவுக்குள்ளே போராட்டம் ம்ம்…..
ஆ……ஆ……ஆ….ஆஆ….
பூவுக்குள்ளே போராட்டம்
அடி வயிற்றில் சின்ன சின்ன தேரோட்டம்
இவள் வாழ்வே தவமாகும்
வரும் பிள்ளை வரமாகும்

பெண் : இந்த நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்
நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்
உறவுகள் பிறந்த நாள் உலகமே மறந்த நாள்
கருவறையில் தீபம் ஏற்றினாள் உருகினாள்

பெண் : நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here