Singers : S. Janaki and Sampathkumar
Music by : Raveendran
Lyrics by : B. A. Chidambaranathan
Varugiraar varugiraar raniyammaa
Paraak paraak paraak
Vaayai modu kaiyai kattu
Vishamam seiyaathae vaalai suruttu
Naan aanaiyittaal
Potti paambaai adanganum yaarum
Pillai purushan aththanai perum
Naanthaan onnu mattravar poojiyam
Ingae nadappathu pombalai rajjiyam
Kapsip kapsip kapsip kapsip
Kapsip kapsip kapsip kapsip moochch….
Paada ninaikkiraen paada mudiyalaiyae
Thinga ninaichchathai thinga mudiyalaiyae
Sudhanthira kaattrai vaanga mudiyalaiyae
Samsaaram thollai thaanga mudiyalaiyae
Ooo…..my lord
Potti paambaai adanganum yaarum
Pillai purushan aththanai perum
Kapsip kapsip kapsip kapsip
Kapsip kapsip kapsip kapsip moochch….
Gupgupgupgup
Gupgupgupgup Endru pugaikka mudiyala
Izhukka izhukka inbam enakku kidaikkala
Raja rani rummy saerththu aada mudiyalla
Seettaattamthaan veettukkulla poda mudiyala
Annan ennadaa thambi ennada
Urimaiyillaatha kudumbaththilae
Annan ennadaa thambi ennada
Urimaiyillaatha kudumbaththilae
Potti paambaai adanganum yaarum
Pillai purushan aththanai perum
Kapsip kapsip kapsip kapsip
Kapsip kapsip kapsip kapsip moochch….
Thai thai thai thai thai thai thai
Thai thai thai thai thai thai thai
Thai thirananaa thirana tharigidathagajoonu
Thai thirananaa thirana tharigidathagajoonu
Thagathimi thagajoonuthaam thagathimi thagajoonuthaam
Thalaangu thagajoonu
Salangaiyaththaan katta mudiyala
Maththalaththaan thatta mudiyala
Thillaanaa paada mudiyala
Mohanambal aaga mudiyala
Thillana mohanambal aaga mudiyala
Anjuvathenna kenjuvathenna
Poruththathu pothum pongi ezhungal
Adimai vilangai udaippom
Chorus : Aamam udaippom
Female : Aanavam pesum vaayai adaippom
Chorus : Aamam adaippom
Female : Poonaigal alla puligal endru
Pudhiya sariththiram padaippom
Chorus : Pudhiya saiththiram padaippom
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சம்பத்குமார்
இசையமைப்பாளர் : ரவீந்தரன்
பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரனாதன்
ஆண் : வருகிறார் வருகிறார் ராணியம்மா
பராக் பராக் பராக்
வாயை மூடு கையை கட்டு
விஷமம் செய்யாதே வாலை சுருட்டு
பெண் : நான் ஆணையிட்டால்
பொட்டிப் பாம்பாய் அடங்கணும் யாரும்
பிள்ளை புருஷன் அத்தனை பேரும்
நான்தான் ஒன்னு மற்றவர் பூஜ்ஜியம்
இங்கே நடப்பது பொம்பளை ராஜ்ஜியம்
பெண் : கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப்
கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் மூச்ச்..........
ஆண் : பாட நினைக்கிறேன் பாட முடியலையே
திங்க நினைச்சதை திங்க முடியலையே
சுதந்திர காற்றை வாங்க முடியலையே
சம்சாரம் தொல்லை தாங்க முடியலையே
ஓஓ.......மை லார்ட்....
பெண் : பொட்டிப் பாம்பாய் அடங்கணும் யாரும்
பிள்ளை புருஷன் அத்தனை பேரும்
பெண் : கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப்
கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் மூச்ச்......
ஆண் : குப்குப்குப்குப்
குப்குப்குப்குப் என்று புகைக்க முடியல
இழுக்க இழுக்க இன்பம் எனக்கு கிடைக்கல
ராஜா ராணி ரம்மி சேர்த்து ஆட முடியல்ல
சீட்டாட்டம் தான் வீட்டுக்குள்ள போட முடியல
ஆண் : அண்ணன் என்னடா தம்பி என்னடா
உரிமையில்லாத குடும்பத்திலே
அண்ணன் என்னடா தம்பி என்னடா
உரிமையில்லாத குடும்பத்திலே
பெண் : பொட்டிப் பாம்பாய் அடங்கணும் யாரும்
பிள்ளை புருஷன் அத்தனை பேரும்
பெண் : கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப்
கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் மூச்ச்...
பெண் : தை தை தை தை தை தை தை
தை தை தை தை தை தை தை
தை திரனனா திரன தரிகிடதகஜுனு
தை திரனனா திரன தரிகிடதகஜுனு
தகதிமி தகஜுனுதாம் தகதிமி தகஜுனுதாம்
தளாங்கு தகஜுனு
பெண் : சலங்கையத்தான் கட்ட முடியல
மத்தளத்தான் தட்ட முடியல
தில்லானா பாட முடியல
மோகனாம்பாள் ஆக முடியல
தில்லானாமோகனாம்பாள் ஆக முடியல
பெண் : அஞ்சுவதென்ன கெஞ்சுவதென்ன
பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்
அடிமை விலங்கை உடைப்போம்..
குழு : ஆமாம் உடைப்போம்...
பெண் : ஆணவம் பேசும் வாயை அடைப்போம்
குழு : ஆமாம் அடைப்போம்
பெண் : பூனைகள் அல்ல புலிகள் என்று
புதிய சரித்திரம் படைப்போம்
குழு : புதிய சரித்திரம் படைப்போம்...