Singer : Rajesh Murugesan

Music by : Rajesh Murugesan

Lyrics by : Karthik Netha

Male : Yarin kanavu indha anda kolamo?
Neerin kumizhi yaavum endha thalamo?
Yarin yaar naano?
Naanil naan vero?
Savin pinnae yaar nirpadho?
Oh… oh… oh…?

Male : Nalai nalai vandhu indrai thinnutho?
Narambu noiyil motha ulagam suthutho?
Kaanum ellamae manadhin yerpaado?
Kaatchi ellamae pudhirin vesham thano?

Male : Naan yaar?
Naan yaar?

Male : Naan naanum matra
Edhumatra paazho?
Naan yaavum attra
Menmai attra melo?
Naan baedhamattra
Bothamattra vazho?
Naan kaala kaala
Kelvi thano?
Naan…

Male : Velai velai endrae
Veegum valvil ingae?
Kaadhal eeram engae?
Aanmah dhagam engae?
Theerivin padhai engae?…eeeee

Male : Vali endraal edhuvo? edhuvo?
Piral manam unarnthidumo?
Irunilaiyil naan edhuvo?
Irandumae mayaiyoo?

Male : Naan yaar?
Naan yaar?
Unmai undu poiyum undu
Yaaru kannil rendum undu?

Male : Kaanal undu thooral undu
Thoongum bothu yedhu undu
Ullam veru udalum veru
Ulli engum uyirum veru

Male : Naan yaar?
Naan yaar?

Male : Poiyae unmai endraal?
Unmai engae engae
Unmai naandhan endraal?
Isthulam yaaro engae?
Neram polum engae …eeee

பாடகர் : ராஜேஷ் முருகேசன்

இசை அமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : யாரின் கனவு இந்த அந்த கோலமோ?
நீரின் குமிழி யாவும் எந்த தாளமோ?
யாரின் யார் நானோ?
நானில் நான் வேரோ?
சாவின் பின்னே யார் நிற்பதோ?
ஓ ஓ ஓ…?

ஆண் : நாளை நாளை வந்து
இன்றைத் தின்னுதோ?
நரம்பு நோயில்
மொத்த உலகம் சுத்துதோ?
ஆண் : காணும் எல்லாமே
மனதின் எற்பாடா?
காட்சி எல்லாமே
புதிரின் வேஷம் தானோ?

ஆண் : நான் யார்?
நான் யார்?

ஆண் : நான் நானுமற்ற எதுமற்ற பாழோ?
நான் யாவுமற்ற மென்மையுற்ற மேலோ?
நான் பேதுமற்ற போதமற்ற வாழோ?
நான் கால கால கேள்வி தானோ?
நான்…

ஆண் : வேலை வேலை என்றே
வேகும் வலியில் இங்கே?
காதல் ஈரம் எங்கே?
ஆன்ம தாகம் எங்கே?
தீர்வின் பாதை எங்கே?…

ஆண் : வலி என்றால் எதுவோ? எதுவோ?
பிறள் மனம் உணர்ந்திடுமோ?
இரு நிலையில் நான் எதுவோ?
இரண்டுமே மாயையோ?

ஆண் : நான் யார்?
நான் யார்?
உண்மை உண்டு பொய்யும் உண்டு
யாரு கண்ணில் ரெண்டும் உண்டு?

ஆண் : காணல் உண்டு தூறல் உண்டு
தூங்கும் போது ஏது உண்டு
உள்ளம் வேறு உடலும் வேறு
உள்ளி எங்கும் உயிரும் வேறு

ஆண் : நான் யார்?
நான் யார்?

ஆண் : பொய்யே உண்மை என்றால்?
உண்மை எங்கே எங்கே?
உண்மை நான்தான் என்றால்?
இஸ்துலம் யாரோ எங்கே?
நேரம் போலும் எங்கே?…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here