Singer : S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Male : Hae hae hae…..
Durrrrrr…….ahaa hae hae

Male : Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu
Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu

Male : En thangachchi vanthuttaa bus melae yaeri
Intha annanthaan paaduraen raagangalai paadi

Male : Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu
Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu haan….

Male : Yaendaa periyasamy….
Pattanaththula poi padichchavangellaam
Porantha giramatha maranthittu
Angiyae poi kudiyaeritaanga
Un thangachchi anga pattam vaangi
Inga giramaththukku vanthu ennadaa
Pannapporaa

Male : Doi…..en thangachi
Ooru ellaam nallapadi maaththuvaa
Ada unnaikooda yaeni mela yaaeththuvaa
Ha…perallaam vaangi vanthu kaattuvaa
Intha thesamellaam vetri kodi naattuvaa

Male : Kastaththa vetti murippaa
Kaalanai etti udhaippaa
Poovaa mella sirippaa thaanaa nenja parippaa
Adi aaththaadi ava vaaradi
Ippa oorkolaam varaporaadi
Pudhu malligai poovula kattungadi mala

Male : Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu
Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu…..hae hae

Male : Saridaa nee soldratha paarththaa un thangachchi
Amsaamaaththaa iruppaa polirukku appadinnaa
Kavalaiya vidu un thangachchiyai naanae kattikkiraen

Male : Doi….un moonjichikku en thangachchi ketkuthaa
Naan eppadipatta mappillaiya
Avalukku parkkaporaen theriyumaa

Male : Manmathana pola oru aambalai
En thangachichiyai katta pora maappila
Ponnaa alanthu veppen seedhanam
En thangachchikku thangamani vaganam

Male : Nee soldratha paaththaa un thangachchi
Tharaiyilae nadakkavida maatta polirukkae

Male : Haahaah aamamdaa

Male : Pallaakku maelae vechchu thookkuven
Intha patti thotti engum suththu kaattuvaen
Poovellam veedhiyila thoovuven
Ava pora vazhi paathaiyellaam maaththuvaen
Santhana kattilalathaan vanthathum padukka vaippaen
Thangaththu meniyilathaan santhanam poosi vaippaen

Male : Ada avathaanae en moochu
Ini oorellaam thinam ava pechu
Ava thangachchi illada annanukku thaayi…

Male : Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu
Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu

Male : En thangachchi vanthuttaa bus melae yaeri
Intha annanthaan paaduraen raagangalai paadi

Male : Nalla kaalam poranthiduchu
Ennoda kastamellam maranthiduchu

Male : Dandanakkada dandanakkada don
Ada thanananana dandanakkada thanthanakkada
Thangirunththa thaangiruththa thaa….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ஹே ஹே ஹே……..
டுர்ர்ர்ரர்…….அஹா ஹே ஹே

ஆண் : நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு
நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு

ஆண் : என் தங்கச்சி வந்துட்டா பஸ் மேலே ஏறி
இந்த அண்ணன்தான் பாடுறேன் ராகங்களை பாடி

ஆண் : நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு
நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு ஹான்….

ஆண் : ஏன்டா பெரியசாமி……
பட்டணத்துல போய் படிச்சவங்கெல்லாம்
பொறந்த கிராமத்த மறந்திட்டு
அங்கியே போய் குடியேறிட்டாங்க
உன் தங்கச்சி அங்க பட்டம் வாங்கி
இங்க கிராமத்துக்கு வந்து என்னடா
பண்ணப்போறா

ஆண் : டோய்….என் தங்கச்சி
ஊரு எல்லாம் நல்லபடி மாத்துவா
அட உன்னைக் கூட ஏணி மேல ஏத்துவா
ஹ…பேரெல்லாம் வாங்கி வந்து காட்டுவா
இந்த தேசமெல்லாம் வெற்றி கொடி நாட்டுவா

ஆண் : கஷ்டத்த வெட்டி முறிப்பா….
காலனை எட்டி உதைப்பா……
பூவா மெல்ல சிரிப்பா தானா நெஞ்சப் பறிப்பா
அடி ஆத்தாடி அவ வாராடி
இப்ப ஊர்கோலம் வரப்போறாடி
புது மல்லிகை பூவுல கட்டுங்கடி மால

ஆண் : நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு
நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு…..ஹே ஹே

ஆண் : சரிடா நீ சொல்றத பார்த்தா உன் தங்கச்சி
அம்சாமாத்தா இருப்பா போலிருக்கு அப்படின்னா
கவலைய விடு உன் தங்கச்சியை நானே கட்டிக்கிறேன்

ஆண் : டோய்…….உன் மூஞ்சிக்கு என் தங்கச்சி கேட்குதா
நான் எப்படிபட்ட மாப்பிள்ளைய
அவளுக்கு பார்க்கப்போறேன் தெரியுமா

ஆண் : மன்மதன போல ஒரு ஆம்பளை
என் தங்கச்சியை கட்டப் போற மாப்பிள
பொன்னா அளந்து வெப்பேன் சீதனம்
என் தங்கச்சிக்கு தங்கமணி வாகனம்

ஆண் : நீ சொல்றத பாத்தா உன் தங்கச்சியை
தரையிலியே நடக்கவிட மாட்ட போலிருக்கே

ஆண் : ஹஹாஹ் ஆமாம்டா

ஆண் : பல்லாக்கு மேலே வெச்சுத் தூக்குவேன்
இந்த பட்டித் தொட்டி எங்கும் சுத்தி காட்டுவேன்
பூவெல்லாம் வீதியில தூவுவேன்
அவ போற வழிப்பாதையெல்லாம் மாத்துவேன்
சந்தனக் கட்டிலலதான் வந்ததும் படுக்க வைப்பேன்
தங்கத்து மேனியில தான் சந்தனம் பூசி வைப்பேன்

ஆண் : அட அவதானே என் மூச்சு
இனி ஊரெல்லாம் தினம் அவ பேச்சு
அவ தங்கச்சி இல்லடா அண்ணனுக்கு தாயி..

ஆண் : நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு
நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு

ஆண் : என் தங்கச்சி வந்துட்டா பஸ்மேலே ஏறி
இந்த அண்ணன் தான் பாடுறேன் ராகங்களை பாடி

ஆண் : நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு

ஆண் : டண்டனக்கட டண்டனக்கட டான்
அட தனனனன டண்டனக்கட தந்தனக்கட
தாங்கிருத்த தாங்கிருத்த தா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here