Singers : S.P. Balasubrahmaniyam and S.Janaki

Music by : Ilayaraja

Male : Nilavae mugam kaatu yennai paarthu oli veesu
Alai pol suthi meetu inidhaana mozhi pesu
Ilam poonkodiyae … ae idhu thaai madiyae

Female : Nilavae mugam kaatu yennai paarthu oli veesu
Alai pol suthi meetu inidhaana mozhi pesu
Anaithen unaiyae … ae idhu thaai madiyae … ae

Male : Nilavae mugam kaatu

Female : Pani polae neerin odaiyae kalangiyathenna mama
Inidhaana thendral unnaiyae
Oorum kurai sollalaama

Male : Kaalam maarum kalakam yenamma
Iravillamal pagalum yethamma
Naan un pillai thaanamma

Female : Naanum kanda kanavu nooraiyaa
Yenathu thaayum neengal thaanaiyaa
Ini un thunai naanaiyaa

Male : Yenai sernthadhu kodi mullaiyae
Idhu polae thunaiyum illaiyae
Ini nee yen tholil pillaiyae

Male : Nilavae mugam kaatu yennai paarthu oli veesu

Female : Anaithen unnaiyae idhu thaai madiyae

Male : Sumai pottu pesum oorendraal
Manam thavithidum maanae
Imai neerum kannin neerendraal
Dhinam kudipavan naanae

Female : Maalaiyodu nadakum theraiyaa
Nadakum podhu vanangum ooraiyaa
Unnai meera yaaraiyaa

Male : Maman tholil saaindha mullaiyae
Mayangi mayangi pesum killaiyae
Nee en vaazhvin ellaiyae

Female : Idhai meeriya thavam illaiyae
Ini yendha kuraiyum illaiyae
Dhinam theerum theerum thollaiyae
Nilavae mugam kaatu yennai paarthu oli veesu
Alai pol suthi meetu inidhaana mozhi pesu

Male : Ilam poonkodiyae idhu thaai madiyae
Nilavae mugam kaatu yennai paarthu oli veesu

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நிலவே முகம்
காட்டு எனைப் பார்த்து
ஒளி வீசு அலை போல்
சுதி மீட்டு இனிதான
மொழி பேசு இளம்
பூங்கொடியே இது
தாய் மடியே

பெண் : நிலவே முகம்
காட்டு எனைப் பார்த்து
ஒளி வீசு அலை போல்
சுதி மீட்டு இனிதான
மொழி பேசு அணைத்தேன்
உனையே இது தாய் மடியே

ஆண் : நிலவே
முகம் காட்டு

பெண் : பனி போல
நீரின் ஓடையே
கலங்கியதென்ன
மாமா இனிதான
தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

ஆண் : காலம் மாறும்
கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும்
ஏதம்மா நான் உன்
பிள்ளை தானம்மா

பெண் : நானும் கண்ட
கனவு நூறய்யா எனது
தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

ஆண் : எனை சேர்ந்தது
கொடி முல்லையே இது
போலே துணையும்
இல்லையே இனி நீ என்
தோளில் பிள்ளையே

ஆண் : நிலவே முகம்
காட்டு எனைப் பார்த்து
ஒளி வீசு

பெண் : அணைத்தேன்
உனையே இது தாய்
மடியே

ஆண் : சுமை போட்டு
பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின்
நீரென்றால் தினம்
குடிப்பவன் நானே

பெண் : மாலையோடு
நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும்
ஊரைய்யா உன்னை மீற
யாரைய்யா

ஆண் : மாமன் தோளில்
சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும்
கிள்ளையே நீ என்
வாழ்வின் எல்லையே

பெண் : இதை மீறிய
தவம் இல்லையே இனி
எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே
நிலவே முகம் காட்டு எனைப்
பார்த்து ஒளி வீசு அலை போல்
சுதி மீட்டு இனிதான மொழி பேசு

ஆண் : இளம் பூங்கொடியே
இது தாய் மடியே நிலவே
முகம் காட்டு எனைப்
பார்த்து ஒளி வீசு


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here