Singer : P. Susheela

Music by : T. Pugazhenthi

Lyrics by : Kannadasan

Female : Ondrae ondru ulagam ondru
Ulagil deivam ondru
Nandrae nandru nalladhai seidhu
Nandraai vaazhvadhu nandru

Female : Ondrae ondru ulagam ondru
Ulagil deivam ondru
Nandrae nandru nalladhai seidhu
Nandraai vaazhvadhu nandru

Female : Aana enbathu uyirezhuthu
Amma appa anbu arivu
Anaithirkkum adhuvae mudhal ezhuthu
Chorus : Amma appa anbu arivu
Anaithirkkum adhuvae mudhal ezhuthu
Female : Aana enbathu uyirezhuthu
Amma appa anbu arivu
Anaithirkkum adhuvae mudhal ezhuthu

Female : Ka na enbathu uyirmai ezhuthu
Kadavul karunai kalvi kangal
Anaithirkkum adhuvae mudhal ezhuthu
Chorus : Kadavul karunai kalvi kangal
Anaithirkkum adhuvae mudhal ezhuthu
Female : Ka na enbathu uyirmai ezhuthu
Kadavul karunai kalvi kangal
Anaithirkkum adhuvae mudhal ezhuthu

Female : Ondrae ondru ulagam ondru
Ulagil deivam ondru
Nandrae nandru nalladhai seidhu
Nandraai vaazhvadhu nandru

Female : Vasuki
Child : Teacher
Female : Engae sollu
Child : Padippu
Female : Vazhum vazhiyai therindhu kolla
Vazhigal seivadhu padippu
Chorus : Vazhigal seivadhu padippu

Female : Vadivelu
Child : Teacher
Female : Nee sollu
Child : Kanakku
Female : Correct
Varuvadhai olungaai veithu kollum
Arivai tharuvadhu kanakku
Chorus : Arivai tharuvadhu kanakku

Female : Parimalam
Child : Boogolam
Female : Paarkum ulagai purindhu kolla
Paadhai solvadhu boogolam
Chorus : Paadhai solvadhu boogolam

Female : Pasupathi
Child : Sarithiram
Female : Paraambaraiyaana munnoor kadhaiyai
Padam solvadhu sarithiram
Chorus : Padam solvadhu sarithiram

Female : Ezhutharivithavan iraivan aagum
Ennum eluthum kannaagum
Chorus : Ennum eluthum kannaagum
Female : Ezhutharivithavan iraivan aagum
Ennum eluthum kannaagum

Female : Yedum arivum kooda irundhaal
Ella nalanum undaagum
Chorus : Ella nalanum undaagum
Female : Yedum arivum kooda irundhaal
Ella nalanum undaagum

Female : Ondrae ondru ulagam ondru
Ulagil deivam ondru
Nandrae nandru nalladhai seidhu
Nandraai vaazhvadhu nandru

Chorus : Ondrae ondru ulagam ondru
Ulagil deivam ondru
Nandrae nandru nalladhai seidhu
Nandraai vaazhvadhu nandru

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. புகேழேந்தி

பாடல் ஆசிரியர்  : கண்ணதாசன்

பெண் : ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
உலகில் தெய்வம் ஒன்று
நன்றே நன்று நல்லதைச் செய்து
நன்றாய் வாழ்வது நன்று…

பெண் : ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
உலகில் தெய்வம் ஒன்று
நன்றே நன்று நல்லதைச் செய்து
நன்றாய் வாழ்வது நன்று…

பெண் : “அ”ன்னா என்பது உயிரெழுத்து
அம்மா அப்பா அன்பு அறிவு
அனைத்திற்கும் அதுவே முதலெழுத்து
குழு : அம்மா அப்பா அன்பு அறிவு
அனைத்திற்கும் அதுவே முதலெழுத்து

பெண் : “அ”ன்னா என்பது உயிரெழுத்து
அம்மா அப்பா அன்பு அறிவு
அனைத்திற்கும் அதுவே முதலெழுத்து

பெண் : “க”ன்னா என்பது உயிர்மெய் எழுத்து
கடவுள் கருணை கல்வி கண்கள்
அனைத்திற்கும் அதுவே முதலெழுத்து
குழு : கடவுள் கருணை கல்வி கண்கள்
அனைத்திற்கும் அதுவே முதலெழுத்து

பெண் : “க”ன்னா என்பது உயிர்மெய் எழுத்து
கடவுள் கருணை கல்வி கண்கள்
அனைத்திற்கும் அதுவே முதலெழுத்து

பெண் : ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
உலகில் தெய்வம் ஒன்று
நன்றே நன்று நல்லதைச் செய்து
நன்றாய் வாழ்வது நன்று..

பெண் : வாசுகி…
பெண் : டீச்சர்….
பெண் : எங்கே சொல்லு
பெண் : படிப்பு
பெண் : வாழும் வழியை தெரிந்துக் கொள்ள
வழிகள் செய்வது படிப்பு
குழு : வழிகள் செய்வது படிப்பு

பெண் : வடிவேலு..
ஆண் : டீச்சர்…
பெண் : நீ சொல்லு
ஆண் : கணக்கு
பெண் : கரெக்ட்
வருவதை ஒழுங்காய் வைத்துக்கொள்ளும்
அறிவைத் தருவது கணக்கு
குழு : அறிவைத் தருவது கணக்கு

பெண் : பரிமளம்…..
பெண் : பூகோளம்……..
பெண் : பார்க்கும் உலகைப் புரிந்து கொள்ள
பாதை சொல்வது பூகோளம்
குழு : பாதை சொல்வது பூகோளம்

பெண் : பசுபதி……
ஆண் : சரித்திரம்….
பெண் : பரம்பரையான முன்னோர் கதையை
பாடம் சொல்வது சரித்திரம்
குழு : பாடம் சொல்வது சரித்திரம்

பெண் : எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்
எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
குழு : எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
பெண் : எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்
எண்ணும் எழுத்தும் கண்ணாகும்

பெண் : ஏடும் அறிவும் கூட இருந்தால்
எல்லா நலனும் உண்டாகும்
குழு : எல்லா நலனும் உண்டாகும்
பெண் : ஏடும் அறிவும் கூட இருந்தால்
எல்லா நலனும் உண்டாகும்

பெண் : ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
உலகில் தெய்வம் ஒன்று
நன்றே நன்று நல்லதைச் செய்து
நன்றாய் வாழ்வது நன்று..

குழு : ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
உலகில் தெய்வம் ஒன்று
நன்றே நன்று நல்லதைச் செய்து
நன்றாய் வாழ்வது நன்று..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here