Singers : P. Susheela and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Adiyaei oru pechchukku sonnaen idhu
Pen buththithaanae
Oru naayagan munnae naam naayagithaanae
Oru pechchukku sonnaen idhu
Pen buththithaanae
Oru naayagan munnae naam naayagithaanae

Female : Thangai enbathil sontha urimai undadi
Thangai enbathil sontha urimai undadi
Idhil thalaivi ennum payaril
Enna perumai undadi
Idhail thalaivi ennum peyaril
Enna perumai undadi

Female : Adiyaei oru pechchukku sonnaen idhu
Pen buththithaanae
Oru aadavan vanthaal naam adimaigalthaanae

Female : Thaayaarum unnai pol thaniyaaga vaazhnthaal
Nee yaethu un annan uravaethadi
Maaraathu uravendru annaavai paadi
Vaazhnthaalae kalyaana ninaivedhadi

Female : Pentaatti aanaalthaan kondaattamae
Pala penn vaazhvil kalyaanam thindaattamae
Adiyaei oru pechchukku sonnaen idhu
Pen buththithaanae
Oru aadavan vanthaal naam adimaigalthaanae

Female : Inbangal saripaathi thunbangal paathi
Kondaadum ilvaazhvu kulavaazhvadi
Inbangal saripaathi thunbangal paathi
Kondaadum ilvaazhvu kulavaazhvadi

Female : Thallaadum kaalaththil arivaayadi
Adhil thaai veetu thunai pola thunai yaedhadi

Female : Adiyaei oru pechchukku sonnaen idhu
Pen buththithaanae
Oru naayagan munnae naam naayagithaanae

Female : Aadhaaram neeyendru aththaanin maarbil
Neeraadum nilai pola nilai yaedhadi
Neeraada naam sendru poraada nernthaal
Vearodum kanneeril mudivedhadi

Female : Kanneerum pen sollum kadhaithaanadi
Adhu ennaalum en vaazhvil kidaiyaathadi
Adhu ennaalum en vaazhvil kidaiyaathadi

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன் இது
பெண் புத்திதானே ஒரு நாயகன் முன்னே
நாம் நாயகிதானே
ஒரு பேச்சுக்கு சொன்னேன் இது
பெண் புத்திதானே ஒரு நாயகன் முன்னே
நாம் நாயகிதானே

பெண் : தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி
தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி
இதில் தலைவி என்னும் பெயரில்
என்ன பெருமை உண்டடி
இதில் தலைவி என்னும் பெயரில்
என்ன பெருமை உண்டடி

பெண் : அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண் புத்திதானே
ஒரு ஆடவன் வந்தால் நாம் அடிமைகள்தானே

பெண் : தாயாரும் உன்னைப் போல் தனியாக வாழ்ந்தால்
நீ ஏது உன் அண்ணன் உறவேதடி
மாறாது உறவென்று அண்ணாவைப் பாடி
வாழ்ந்தாலே கல்யாண நினைவேதடி

பெண் : பெண்டாட்டி ஆனால்தான் கொண்டாட்டமே
பல பெண் வாழ்வில் கல்யாணம் திண்டாட்டமே
அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண் புத்திதானே
ஒரு ஆடவன் வந்தால் நாம் அடிமைகள்தானே

பெண் : இன்பங்கள் சரிபாதி துன்பங்கள் பாதி
கொண்டாடும் இல்வாழ்வு குலவாழ்வடி
இன்பங்கள் துன்பங்கள் எங்கென்று தேடி
அங்கெல்லாம் நான் போக முடியாதடி

பெண் : தள்ளாடும் காலத்தில் அறிவாயடி
அதில் தாய் வீட்டு துணை போல துணை ஏதடி

பெண் : அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
இது பெண் புத்திதானே
ஒரு நாயகன் முன்னே நாம் நாயகிதானே

பெண் : ஆதாரம் நீயென்று அத்தானின் மார்பில்
நீராடும் நிலை போல நிலை ஏதடி
நீராட நாம் சென்று போராட நேர்ந்தால்
வேரோடும் கண்ணீரில் முடிவேதடி

பெண் : கண்ணீரும் பெண் சொல்லும் கதைதானடி
அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி
அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here