Singers : T. M. Soundarajan and L. R. Eswari
Music by : Viswanathan Ramamoorthy
Lyrics by : Vaali
Paruvathil konjam uruvathil konjam
Pennukku azhagu varum
Paarthathil konjam pazhakkathil konjam
Aanukku aasai varum
Paruvathil konjam uruvathil konjam
Pennukku azhagu varum
Paarthathil konjam pazhakkathil konjam
Aanukku aasai varum
Unnai ninaithaeno udal ilaithaeno
Ennai koduthaeno nenjai eduthaeno
Solla theriyaadho solli puriyaadho
Andha kalaithaano indha nilaithaano
Paruvathil konjam uruvathil konjam
Pennukku azhagu varum
Paarthathil konjam pazhakkathil konjam
Aanukku aasai varum
Vizhi malarambu veesiya pinbu
Aval thaan arugil vandhaalo
Vizhi malarambu veesiya pinbu
Aval thaan arugil vandhaalo
Thottavan munnae thodarnthaval pinnae
Aasaiyil urugi nindraalo
Mangai malarmaeni mannan oru thaeni
Indha idhazh kovai innum konjam thevai
Kangal padalaamo kaigal thodalaamo
Naanam varalaaamo naanum varalaamoo
Poluthoru mayakkam paarvaiyil pirakkum
Punnagai thoodhu varum
Pagalukku ninaivum iravukku kanavum
Poovizhi vaasal varum
Kannena sivapoo
Kaniyidhazh veluppoo
Idhu than kaadhal enbaaro
Kaivalai nazhuvum
Ponnudal meliyum
Idhudhaan yekkam enbaaro
Thookkathil vizhikkum
Mounathil pesum
Adhu thaan idhayam enbaaro
Kaalathai kazhikkum
Kadhalil pizhaikkum
Adhuthaan ilamai enbaaro
Maalai iravaagum
Male : Mangai uravaagum
Female : Maalai poluthaagum
Male : Kadhai mudivaagum
Female :Mella sugam serum
Male : Innum konjam vendum
Female : Indru mattumthaano
Male : Endrum viduveno
Both : Paruvathil konjam uruvathil konjam
Pennukku azhagu varum
Paarthathil konjam pazhakkathil konjam
Aanukku aasai varum
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம்
பெண்ணுக்கு அழகு வரும்
பார்த்ததில் கொஞ்சம் பழக்கத்தில் கொஞ்சம்
ஆணுக்கு ஆசை வரும்...
பெண் : பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம்
பெண்ணுக்கு அழகு வரும்
பார்த்ததில் கொஞ்சம் பழக்கத்தில் கொஞ்சம்
ஆணுக்கு ஆசை வரும்..
பெண் : உன்னை நினைத்தேனோ உடல் இளைத்தேனோ
என்னைக் கொடுத்தேனோ நெஞ்சை எடுத்தேனோ
சொல்லத் தெரியாதோ சொல்லிப் புரியாதோ
அந்தக் கலைதானோ இந்த நிலைதானோ...
பெண் : பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம்
பெண்ணுக்கு அழகு வரும்
பார்த்ததில் கொஞ்சம் பழக்கத்தில் கொஞ்சம்
ஆணுக்கு ஆசை வரும்..
ஆண் : விழி மலரம்பு வீசிய பின்பு
அவள்தான் அருகில் வந்தாளோ
விழி மலரம்பு வீசிய பின்பு
அவள்தான் அருகில் வந்தாளோ
தொட்டவன் முன்னே தொடர்ந்தவள் பின்னே
ஆசையில் உருகி நின்றாளோ
ஆண் : மங்கை மலர்மேனி மன்னன் ஒரு தேனீ
இந்த இதழ் கோவை இன்னும் கொஞ்சம் தேவை
கண்கள் படலாமோ கைகள் தொடலாமோ
நாணம் வரலாமோ நானும் வரலாமோ
ஆண் : பொழுதொரு மயக்கம் பார்வையில் பிறக்கும்
புன்னகை தூது வரும்
பகலுக்கு நினைவும் இரவுக்கு கனவும்
பூவிழி வாசல் வரும்
பெண் : கண்ணென்ன சிவப்போ
கனியிதழ் வெளுப்போ
இதுதான் காதல் என்பாரோ
கைவளை நழுவும்
பொன்னுடல் மெலியும்
இதுதான் ஏக்கம் என்பாரோ
ஆண் : தூக்கத்தில் விழிக்கும்
மௌனத்தில் பேசும்
அதுதான் இதயம் என்பாரோ
காலத்தை கழிக்கும்
காதலில் பிழைக்கும்
அதுதான் இளமை என்பாரோ
பெண் : மாலை இரவாகும்
ஆண் : மங்கை உறவாகும்
பெண் : மாலை பொழுதாகும்
ஆண் : கதை முடிவாகும்
பெண் : மெல்ல சுகம் சேரும்
ஆண் : இன்னும் கொஞ்சம் வேண்டும்
பெண் : இன்று மட்டும்தானோ
ஆண் : என்றும் விடுவேனோ
இருவரும் : பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம்
பெண்ணுக்கு அழகு வரும்
பார்த்ததில் கொஞ்சம் பழக்கத்தில் கொஞ்சம்
ஆணுக்கு ஆசை வரும்...