Singer : Mu. Ka. Muthu

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Pillaiyaiyum killivittu
Thottilaiyum aati vittu
Nalla pillai polirukkum magaraasi
Pillaiyaiyum killivittu
Thottilaiyum aati vittu
Nalla pillai polirukkum magaraasi

Male : Silar poonaikkum thozhan enbaar
Paalukkum kaaval enbaar
Antha kadhai kaattuthu un mugaraasi

Male : Pillaiyaiyum killivittu
Thottilaiyum aati vittu
Nalla pillai polirukkum magaraasi

Male : Kadhalil paathi kaividum jaathi
Kaalaigal enbarkal ellorum
Aanaal kadhalan thannai kaividum pennai
Kandavar illaiyammaa ennaalum

Male : Pudhithaai irukkuthammaa seemaatti unnai
Pennena solluvathaar paaraattu

Male : Pillaiyaiyum killivittu
Thottilaiyum aati vittu
Nalla pillai polirukkum magaraasi

Male : Sooriyan thannai yaarena ketkum
Thaamarai pooovengum kidaiyaathu
Un ullaththai kelu unmaiyai koorum
Nenjukku poi solla theriyaathu

Male : Nilavai vaanariyum thannaalae
Nam uravai oorariyum munnaalae

Male : Pillaiyaiyum killivittu
Thottilaiyum aati vittu
Nalla pillai polirukkum magaraasi

Male : Ooruyir endru uravinil andru
Eeruyir kalanthathellaam poiyaachchu
Antha pattinaththaarum pathinettu perum
Paadina vaarththaiyellaam meiyaachchu

Male : Nambinor keduvathundu pennaalae
Endra nalla sol paliththathammaa unnaalae

Male : Pillaiyaiyum killivittu
Thottilaiyum aati vittu
Nalla pillai polirukkum magaraasi

பாடகர் : மு. க. முத்து

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டி விட்டு
நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி
பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டி விட்டு
நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி

ஆண் : சிலர் பூனைக்கும் தோழன் என்பார்
பாலுக்கும் காவல் என்பார்
அந்தக் கதை காட்டுது உன் முகராசி

ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டி விட்டு
நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி

ஆண் : காதலில் பாதி கைவிடும் ஜாதி
காளைகள் என்பார்கள் எல்லோரும்
ஆனால் காதலன் தன்னை கைவிடும் பெண்ணை
கண்டவர் இல்லையம்மா எந்நாளும்

ஆண் : புதிதாய் இருக்குதம்மா சீமாட்டி உன்னை
பெண்ணென சொல்லுவதார் பாராட்டி

ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டி விட்டு
நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி

ஆண் : சூரியன் தன்னை யாரென கேட்கும்
தாமரை பூவெங்கும் கிடையாது
உன் உள்ளத்தைக் கேளு உண்மையைக் கூறும்
நெஞ்சுக்கு பொய் சொல்லத் தெரியாது

ஆண் : நிலவை வானறியும் தன்னாலே
நம் உறவை ஊரறியும் முன்னாலே

ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டி விட்டு
நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி

ஆண் : ஓருயிர் என்று உறவினில் அன்று
ஈருயிர் கலந்ததெல்லாம் பொய்யாச்சு
அந்த பட்டினத்தாரும் பதினெட்டு பேரும்
பாடின வார்த்தையெல்லாம் மெய்யாச்சு

ஆண் : நம்பினோர் கெடுவதுண்டு பெண்ணாலே
என்ற நல்ல சொல் பலித்ததம்மா உன்னாலே

ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டி விட்டு
நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here