Singers : Anuradha Sriram and Krishnaraj
Music Director : Deva
Lyricist : Vairamuthu
Poomaalai podum velai
Poontholil seru velai
Ponnaalai kaanum velai
Mounamaa
Poongaattru veesum velai
Poonjolai aadum velai
Pon maarbil theendum velai
Mayakkamaa….aa…aa..
Enthan moochchu
Unnai suttrithaan suzhalum
Enthan kangal unnai
Mattumthaan ariyum
Saththamindri
Yuththam ondril saranadaiyum
Raththam ellaam ushnam
Kondu kuliradaiyum
Poomaalai podum velai
Poontholil saerum velai
Ponnaalai kaanum velai
Mounamaa
Mullai poovai thottu
Muththam kodi ittu
Sontham sollaamal sugam kandathu
Kannil thoondil ittu
Ennai thoondi vittu
Konji yaethetho kadhai sonnathu
Thottu unnai eduththaal
Kanni vidum endru
Nenjil unnai naan pathiththaen
Pattu vidum munpu
Thottu vida enni
Kotti ennai naan koduththaen
Thiyaagamaa solladi
Mannil neeyindri naan yedhadi
Poomaalai podum velai
Poontholil seru velai
Ponnaalai kaanum velai
Mounamaa
Unthan paatham patta
Mannai naanum thottu
Nettri pottaaga naan sooduvaen
Unnai kaattru thottaal
Thalli kaavalittu anbu
Soththaaga kaappattruvaen
Jenmam pala thodarnthaen
Unnai enni alainthaen
Indru unnai naan adainthaen
Engum unnai thodarnthaen
Angam engum kalanthaen
Vinnil indru naan paranthaen
Jenmamae pothumae
Intha aanantham eediyillaiyae
Poogaattru veesum velai
Poonjolai aadum velai
Pon maarbai theendum velai
Mayakkamaa….aaaa….
Enthan moochchu
Unnai suttrithaan suzhalum
Enthan kangal unnai
Mattumthaan ariyum
Saththam indri
Yuththam ondril saranadaiyum
Raththam ellaam ushnam
Kondu kuliradaiyum
Poomaalai podum velai
Poontholil seru velai
Ponnaalai kaanum velai
Mounamaa
Poongaattru veesum velai
Poonjolai aadum velai
Pon maarbil theendum velai
Mayakkamaa….aa…aa..aa….
பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம் மற்றும் கிருஷ்ணராஜ்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வைரமுத்து
பெண் : பூமாலை போடும் வேளை
பூந்தோளில் சேரும் வேளை
பொன்னாளை காணும் வேளை
மௌனமா
ஆண் : பூங்காற்று வீசும் வேளை
பூஞ்சோலை ஆடும் வேளை
பொன் மார்பில் தீண்டும் வேளை
மயக்கமா...ஆஆ....ஆ..
பெண் : எந்தன் மூச்சு
உன்னை சுற்றி தான் சுழலும்
எந்தன் கண்கள் உன்னை
மட்டும் தான் அறியும்
ஆண் : சத்தம் இன்றி
யுத்தம் ஒன்றில் சரணடையும்
ரத்தம் எல்லாம் உஷ்ணம்
கொண்டு குளிரடையும்
பெண் : பூமாலை போடும் வேளை
பூந்தோளில் சேரும் வேளை
பொன்னாளை காணும் வேளை
மௌனமா
ஆண் : முல்லை பூவை தொட்டு
முத்தம் கோடி இட்டு
சொந்தம் சொல்லாமல் சுகம் கண்டது
பெண் : கண்ணில் தூண்டில் இட்டு
என்னை தூண்டி விட்டு
கொஞ்சி ஏதேதோ கதை சொன்னது
ஆண் : தொட்டு உன்னை எடுத்தால்
கன்னி விடும் என்று
நெஞ்சில் உன்னை நான் பதித்தேன்
பெண் : பட்டு விடும் முன்பு
தொட்டு விட எண்ணி
கொட்டி என்னை நான் கொடுத்தேன்
ஆண் : தியாகமா சொல்லடி
மண்ணில் நீயின்றி நான் ஏதடி
பெண் : பூமாலை போடும் வேளை
பூந்தோளில் சேரும் வேளை
பொன்னாளை காணும் வேளை
மௌனமா
பெண் : உந்தன் பாதம் பட்ட
மண்ணை நானும் தொட்டு
நெற்றிப் பொட்டாக நான் சூடுவேன்
ஆண் : உன்னை காற்று தொட்டால்
தள்ளி காவலிட்டு அன்பு
சொத்தாக காப்பாற்றுவேன்
பெண் : ஜென்மம் பல தொடர்ந்தேன்
உன்னை எண்ணி அலைந்தேன்
இன்று உன்னை நான் அடைந்தேன்
ஆண் : எங்கும் உன்னை தொடர்ந்தேன்
அங்கம் எங்கும் கலந்தேன்
விண்ணில் இன்று நான் பறந்தேன்
பெண் : ஜென்மமே போதுமே
இந்த ஆனந்தம் ஈடில்லையே
ஆண் : பூங்காற்று வீசும் வேளை
பூஞ்சோலை ஆடும் வேளை
பொன் மார்பை தீண்டும் வேளை
மயக்கமா...ஆஆஆ..
பெண் : எந்தன் மூச்சு
உன்னை சுற்றி தான் சுழலும்
எந்தன் கண்கள் உன்னை
மட்டும் தான் அறியும்
ஆண் : சத்தம் இன்றி
யுத்தம் ஒன்றில் சரணடையும்
ரத்தம் எல்லாம் உஷ்ணம்
கொண்டு குளிரடையும்
பெண் : பூமாலை போடும் வேளை
பூந்தோளில் சேரும் வேளை
பொன்னாளை காணும் வேளை
மௌனமா
ஆண் : பூங்காற்று வீசும் வேளை
பூஞ்சோலை ஆடும் வேளை
பொன் மார்பை தீண்டும் வேளை
மயக்கமா...ஆஆஆ..