Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Female : Theviyadi mariyamma
Sirippa sirikkiraaye
Ennai sirippaa sirikka vaikka
Silaiya nikkiriye
Female : Pothumada sami
Ponnupatta paadu
Pothumada sami
Ponnupatta paadu
Female : Naathiyillaa boomi
Ithu nanmaiyilla naadu
Pothumada sami
Ponnupatta paadu
Female : Naathiyillaa boomi
Ithu nanmaiyilla naadu
Pothumada sami
Ponnupatta paadu
Female : Pasithapothu soreduthu
Kodutha kaiyai
Kadithu paarkum janangale
Female : Pathungi paayum
Mirugamellaam ungalodu
Piranthu vantha inangale
Female : Pasithapothu soreduthu
Kodutha kaiyai
Kadithu paarkum janangale
Female : Pathungi paayum
Mirugamellaam ungalodu
Piranthu vantha inangale
Female : Poojai seiveere
Pennai thevi enbeere
Vaazhvillaatha penninathai
Paavi enbeere
Female : Pothumada sami
Ponnupatta paadu
Female : Idamillamal koyil katti
Madangal katti
Kulangal vetti podungal
Female : Irandu kaiyil vilakkeduthu
Irakkamendraal
Ennavendru thedungal
Female : Idamillamal koyil katti
Madangal katti
Kulangal vetti podungal
Female : Irandu kaiyil vilakkeduthu
Irakkamendraal
Ennavendru thedungal
Female : Kannai vaithaane irandu
Kaiyai vaithaane
Avan manasai mattum eduthu vaikka
Maranthu vittaane
Female : Pothumada sami
Ponnupatta paadu
Female : Antha kaalam bakthanuku
Vanthu vanthu kaatchi thantha
Kadavule
Female : Intha kaalam neengalellam
Irukkumidam engalukku
Theriyala
Female : Antha kaalam bakthanuku
Vanthu vanthu kaatchi thantha
Kadavule
Female : Intha kaalam neengalellam
Irukkumidam engalukku
Theriyala
Female : Pothumada sami
Ponnupatta paadu
Female : Kallaithaan kandom verum
Sembaithaan kandom iru
Kan thiranthu pennai paarkum
Karunaiyai kaanom
Female : Iraivanukke kan koduthaan
Engalaipol manithanaana
Kannappa
Female : Manithanukku kan kodukka
Iraivanaalum mudiyalaiye
Yenappaa
Female : Saathiram poyyo..
Ketta sarithiram poyyo..
Naangal aathirathil padaithukonda
Aandavan poyyo..
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : தேவியடி மாரியம்மா
 சிரிப்பா சிரிக்கிறியே……!
 என்னை சிரிப்பா சிரிக்க வைத்து
 சிலையா நிக்கிறியே….!
பெண் : போதுமடா சாமி
 பொண்ணுப்பட்ட பாடு
 போதுமடா சாமி
 பொண்ணுப்பட்ட பாடு
பெண் : நாதியில்லா பூமி
 இது நன்மையில்லா நாடு
 போதுமடா சாமி
 பொண்ணுப்பட்ட பாடு
பெண் : நாதியில்லா பூமி
 இது நன்மையில்லா நாடு…..
 போதுமடா சாமி
 பொண்ணுப்பட்ட பாடு
பெண் : பசித்தபோது சோறெடுத்துக்
 கொடுத்த கையைக்
 கடித்துப் பார்க்கும் ஜனங்களே
பெண் : பதுங்கிப் பாயும் மிருகமெல்லாம்
 உங்களோடு
 பிறந்து வந்த இனங்களே
பெண் : பசித்தபோது சோறெடுத்துக்
 கொடுத்த கையைக்
 கடித்துப் பார்க்கும் ஜனங்களே
பெண் : பதுங்கிப் பாயும் மிருகமெல்லாம்
 உங்களோடு
 பிறந்து வந்த இனங்களே
பெண் : பூஜை செய்வீரே
 பெண்ணை தேவி என்பீரே
 வாழ்வில்லாத பெண்ணினத்தைப்
 பாவி என்பீரே
பெண் : போதுமடா சாமி
 பொண்ணுப்பட்ட பாடு
பெண் : இடமில்லாமல் கோயில் கட்டி
 மடங்கள் கட்டி
 குளங்கள் வெட்டிப் போடுங்கள்
பெண் : இரண்டு கையில்
 விளக்கெடுத்து
 இரக்கமென்றால் என்னவென்று தேடுங்கள்
பெண் : இடமில்லாமல் கோயில் கட்டி
 மடங்கள் கட்டி
 குளங்கள் வெட்டிப் போடுங்கள்
பெண் : இரண்டு கையில்
 விளக்கெடுத்து
 இரக்கமென்றால் என்னவென்று தேடுங்கள்
பெண் : கண்ணை வைத்தானே இரண்டு
 கையை வைத்தானே – அவன்
 மனசை மட்டும் எடுத்து வைக்க
 மறந்து விட்டானே…………
பெண் : போதுமடா சாமி
 பொண்ணுப்பட்ட பாடு
பெண் : அந்தக் காலம் பக்தனுக்கு
 வந்து வந்து காட்சி தந்த கடவுளே
பெண் : இந்தக் காலம் நீங்களெல்லாம்
 இருக்குமிடம் எங்களுக்குத் தெரியல்ல
பெண் : அந்தக் காலம் பக்தனுக்கு
 வந்து வந்து காட்சி தந்த கடவுளே
பெண் : இந்தக் காலம் நீங்களெல்லாம்
 இருக்குமிடம் எங்களுக்குத் தெரியல்ல
பெண் : கல்லைத்தான் கண்டோம் வெறும்
 செம்பைத்தான் கண்டோம் – இரு
 கண் திறந்து பெண்ணைப் பார்க்கும்
 கருணையைக் காணோம்
பெண் : போதுமடா சாமி
 பொண்ணுப்பட்ட பாடு
பெண் : இறைவனுக்கே கண் கொடுத்தான்
 எங்களைப்போல் மனிதனான கண்ணப்பா
பெண் : மனிதனுக்குக் கண் கொடுக்க
 இறைவனாலும் முடியலையே ஏனப்பா
பெண் : சாத்திரம் பொய்யோ
 கேட்ட சரித்திரம் பொய்யோ
 நாங்கள் ஆத்திரத்தில் படைத்துக் கொண்ட
 ஆண்டவன் பொய்யோ


