Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Rajaththi pettreduthaal rajakumari
En rajavukku aval oru selvakumari
Rajaththi pettreduthaal rajakumari
En rajavukku aval oru selvakumari
Female : Thanga pappa intha veettil illayakumari
Pettra thaai veedae kadhi enavae vantha kumari
Female : Rajaththi pettreduthaal rajakumari
En rajavukku aval oru selvakumari
Female : Aayiram seervarisai
Alli vaippaal annaiyendru
Naanooru vandi katti
Nadanthu vanthaal selvamagal
Female : Thaai veettu seedhanamo
Thaaliyindri yaaedhumillai
Thaaliyindri yaaedhumillai
Paai pottu kannuranga
Paavi kannil thookkamillai
Female : Maanikka thottil kaana ninaiththu
Mangalam kondathadi
Mannanumindri makkalumindri
Vanthu vizhunthathadi
Female : Rajaththi pettreduthaal rajakumari
En rajavukku aval oru selvakumari
Female : Anju magal pettreduththaal
Arasargalum aandiyadi
Anjaththaan naanum pettraen
Aandavanai vendiyadi
Female : Konjamaa aasai vaithaen
Kodaanu kodiyadi
Koththodu vanthathadi
Pettreduththa kiligaladi
Pettreduththa kiligaladi
Female : Ennaththai solli ennaththai enni
Aaruthal kolvathadi
Koyilai kandu saamiyai kandu
Kumbittu kelungadi
Female : Rajaththi pettreduthaal rajakumari
En rajavukku aval oru selvakumari
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி
 என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி
 ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி
 என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி
பெண் : தங்க பாப்பா இந்த வீட்டில் இளையகுமாரி
 பெற்ற தாய் வீடே கதி எனவே வந்த குமாரி
பெண் : ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி
 என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி
பெண் : ஆயிரம் சீர்வரிசை
 அள்ளி வைப்பாள் அன்னையென்று
 நானூறு வண்டி கட்டி
 நடந்து வந்தாள் செல்வமகள்
பெண் : தாய் வீட்டுச் சீதனமோ
 தாலியின்றி ஏதுமில்லை
 தாலியின்றி ஏதுமில்லை
 பாய் போட்டு கண்ணுறங்க
 பாவி கண்ணில் தூக்கமில்லை
பெண் : மாணிக்கத் தொட்டில் காண நினைத்து
 மங்கலம் கொண்டதடி
 மன்னனுமின்றி மக்களுமின்றி
 வந்து விழுந்ததடி…….
பெண் : ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி
 என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி
பெண் : அஞ்சு மகள் பெற்றெடுத்தால்
 அரசர்களும் ஆண்டியடி
 அஞ்சத்தான் நானும் பெற்றேன்
 ஆண்டவனை வேண்டியடி
பெண் : கொஞ்சமா ஆசை வைத்தேன்
 கோடானு கோடியடி
 கொத்தோடு வந்ததடி
 பெற்றெடுத்த கிளிகளடி
 பெற்றெடுத்த கிளிகளடி
பெண் : என்னத்தைச் சொல்லி என்னத்தை எண்ணி
 ஆறுதல் கொள்வதடி
 கோயிலைக் கண்டு சாமியைக் கண்டு
 கும்பிட்டுக் கேளுங்கடி……..
பெண் : ராஜாத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரி
 என் ராஜாவுக்கு அவள் ஒரு செல்வகுமாரி


