Singers : P. Susheela and P. Jayachandran
Music by : Gangai Amaran
Lyrics by : Poovai Senguttuvan
Sindhu nathiyoram thendral vilaiyaadum
Kannan varavum kanni uravum
Kadhal geedham paadum
Sindhu nathiyoram thendral vilaiyaadum
Kannan varavum kanni uravum
Kadhal geedham paadum
Both : Sindhu nathiyoram…….
Kanni ila mayil chinna manikkuyil
Ennai nerungidumpothu ennam pogum thoothu
Female : Kayirandil alli kadhal kadhai solli
Ullam magizhnthidum pothu inbam veru yaedhu
Nenjil eduththaen konji kaliththaen
Vanji unakkendru vaazhgiraen
Female : Innum edharkintha paarvaiyo
Enna thevaiyo…..enna thevaiyo…..ho….
Sindhu nathiyoram thendral vilaiyaadum
Kannan varavum kanni uravum
Kadhal geedham paadum
Sindhu nathiyoram…….
Chinnanjiru chittu unthan kaigal pattu
Thannai maranthidumpothu thanimai enbathethu
Male : Mottavizhntha mullai kattazhagin ellai
Thattu thazhuvidumpothu sorkkam veraethu
Mangai azhagi malaiyaruvi
Pongi perugidum en manam
Male : Gangai nadhikkenna thaagamo
Enna vegamo thannai meerummo….ho…
Sindhu nathiyoram thendral vilaiyaadum
Male : Kannan varavum kanni uravum
Kadhal geedham paadum
Both : Sindhu nathiyoram…….
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்
பெண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்
கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும்
ஆண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்...
கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும்
இருவர் : சிந்து நதியோரம்..............
ஆண் : கன்னி இள மயில் சின்ன மணிக்குயில்
என்னை நெருங்கிடும்போது எண்ணம் போகும் தூது
பெண் : கையிரெண்டில் அள்ளி காதல் கதை சொல்லி
உள்ளம் மகிழ்ந்திடும் போது இன்பம் வேறு ஏது
ஆண் : நெஞ்சில் எடுத்தேன் கொஞ்சிக் களித்தேன்
வஞ்சி உனக்கென்று வாழ்கிறேன்
பெண் : இன்னும் எதற்கிந்த பார்வையோ
என்ன தேவையோ.......என்ன தேவையோ...ஹோ......
ஆண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்...
கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும்
ஆண் : சிந்து நதியோரம்.............
பெண் : சின்னஞ்சிறு சிட்டு உந்தன் கைகள் பட்டு
தன்னை மறந்திடும்போது தனிமை என்பதேது
ஆண் : மொட்டவிழ்ந்த முல்லை கட்டழகின் எல்லை
தொட்டுத் தழுவிடும் போது சொர்க்கம் வேறேது
பெண் : மங்கை அழகி மலையருவி
பொங்கி பெருகிடும் என் மனம்
ஆண் : கங்கை நதிக்கென்ன தாகமோ
என்ன வேகமோ தன்னை மீறும்மோ.......ஹோ....
பெண் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்
ஆண் : கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும்
இருவர் : சிந்து நதியோரம்........