Singer : Sathya Prakash

Music by : Isai Arasan

Male : Tamil eela kaatrae…
Tamil eela kaatrae…
Vinnin vazhi vandhu veesu
Engal mannin sugam kandu pesu

Male : Tamil eela kaatrae…
Tamil eela kaatrae…
Vinnin vazhi vandhu veesu
Engal mannin sugam kandu pesu

Male : Uyirai kodutha annai
Kayiraai kidappaalo?..
Elumbai kodutha thandhai
Narambaai kidappaaro?..

Male : Nalloor murugan koyilmaniyil
Nalla sedhi varumo?..
Ulloor vaazhum oomai janangal
Uyirum udalum nalamo?..

Male : Oodiya veedhigal sugamaa?..
Engal oruthalai kaadhali sugamaa?..
Paadiya palligal sugamaa?..
Udan paditha anilgal sugamaa?..

Male : Orumurai vandhu sollipoo
Engal uyirai konjam allipoo

Male : Tamil eela kaatrae…
Tamil eela kaatrae…
Vinnin vazhi vandhu veesu
Engal mannin sugam kandu pesu

Male : Mullaitheevin katharal
Moochil valikkirathae
Nandhi kadalin olam
Narambai arukkirathae

Male : Pillaikarigal samaithu muditha
Theeyum micham ulladho?..
Engal oorai erithu meendha
Saambal saatchi ulladho?…

Male : Vannikaadugal sugamaa? ..
Engal valvettithuraiyum sugamaa?..
Kaaindha kanneer sugamaa?..
Innum kaayaadha kurudhiyum sugamaa?..

Male : Orumurai vandhu sollipo
Engal uyirai konjam allipoo

Male : Tamil eela kaatrae…
Tamil eela kaatrae…
Vinnin vazhi vandhu veesu
Engal mannin sugam kandu pesu

பாடகர் : சத்யப்ரகாஷ்

இசை அமைப்பாளர் : இசை அரசன்

ஆண் : தமிழ் ஈழக் காற்றே!
தமிழ் ஈழக் காற்றே!
விண்ணின் வழி வந்து வீசு எங்கள்
மண்ணின் சுகம் கண்டு பேசு

ஆண் : தமிழ் ஈழக் காற்றே!
தமிழ் ஈழக் காற்றே!
விண்ணின் வழி வந்து வீசு எங்கள்
மண்ணின் சுகம் கண்டு பேசு

ஆண் : உயிரைக் கொடுத்த அன்னை
கயிறாய் கிடப்பாளோ?
எலும்பைக் கொடுத்த தந்தை
நரம்பாய் கிடப்பாரோ?

ஆண் : நல்லூர் முருகன் கோயில்மணியில்
நல்ல சேதி வருமோ?
உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள்
உயிரும் உடலும் நலமோ?

ஆண் : ஓடிய வீதிகள் சுகமா?
எங்கள் ஒருதலைக் காதலி சுகமா?
பாடிய பள்ளிகள் சுகமா?
உடன் படித்த அணில்கள் சுகமா?

ஆண் : ஒருமுறை வந்து சொல்லிப்போ
எங்கள் உயிரை கொஞ்சம் அள்ளிப்போ

ஆண் : தமிழ் ஈழக் காற்றே!
தமிழ் ஈழக் காற்றே!
விண்ணின் வழி வந்து வீசு எங்கள்
மண்ணின் சுகம் கண்டு பேசு

ஆண் : முல்லைத் தீவின் கதறல்
மூச்சில் வலிக்கிறதே
நந்திக் கடலின் ஓலம்
நரம்பை அறுக்கிறதே

ஆண் : பிள்ளைக்கறிகள் சமைத்து முடித்த
தீயும் மிச்சம் உள்ளதோ?
எங்கள் ஊரை எரித்து மீந்த
சாம்பல் சாட்சி உள்ளதோ?

ஆண் : வன்னிக்காடுகள் சுகமா?
எங்கள் வல்வெட்டித்துறையும் சுகமா?
காய்ந்த கண்ணீர் சுகமா?
இன்னும் காயாத குருதி சுகமா ?

ஆண் : ஒருமுறை வந்து சொல்லிப்போ
எங்கள் உயிரை கொஞ்சம் அள்ளிப்போ

ஆண் : தமிழ் ஈழக் காற்றே!
தமிழ் ஈழக் காற்றே!
விண்ணின் வழி வந்து வீசு எங்கள்
மண்ணின் சுகம் கண்டு பேசு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here