Singer : Jagadeesh Kumar Balraj

Music by : Karthick Harsha

Lyrics by : Viky

Male : Thalladumm nenje thalladumm nenje
Yaarumillai inge enakena
Theeramal odum kanneerum inge
Thaayum illai adhai thudaithida
Naan saaiyum tholgal kaanamal nindren
Thandhai illai ennai sumanthida

Male : Inaiyaga nindre enai kaatha annan
Uyirindri unai kaana aalaneno
Karuvagha ennai sumakadha annai
Unai indru izhanthaae naan veenaneno

Male : Veenaaneno naan veenaaneno
Un paadhayil naan serveno

Male : Yaar iniyen vedhanaigal ketiruppaaro
Punnagaikkum neram enai paarthirupaaro
Thaavarangal noorirunthaal orr vanamaagum
Oar ilai naan en nilayo ini irulaagum

Male : Maayaulagilae enai vaattum thanimaiye
Podhum enaiyum maaithiduvaayo

Male : Thalladumm nenje thalladumm nenje
Podhum podhum ini purapadu
Ellamum ingae illamal ponaal
Paadhai varum adhil uyir vidu

Male : Pogathae endru sonnalum kaalam
Dhooram sella neeyum thuninthidu
Varnangal illa vaanavil pola
Kalainthenae naanum thaan ulagilae
Oli indri naalum irulaagi ponen
Ini endhan vazhi thedi naan pogiren
Naan pogiren naan pogiren
Un paadhayil thaan naan veezhgiren

பாடகர் : ஜெகதீஷ் குமார் பால்ராஜ்

இசை அமைப்பாளர் : கார்த்திக் ஹர்ஷா

பாடல் ஆசிரியர் : விக்கி

ஆண் : தள்ளாடும் நெஞ்சே தள்ளாடும் நெஞ்சே
யாருமில்லை இங்கு எனக்கென
தீராமல் ஓடும் கண்ணீரும் இங்கே
தாயும் இல்லை அதை துடைத்திட
நான் சாயும் தோள்கள் காணாமல் நின்றேன்
தந்தை இல்லை என்னை சுமந்திட

ஆண் : இணையாக நின்ற எனை காத்த அண்ணன்
உயிர்ன்றி உனை காண ஆளனேனோ
கருவாக என்னை சுமக்காத அன்னை
உனை இன்று இழந்தே நான் வீணானேனோ

ஆண் : வீணானேனோ நான் வீணானேனோ
உன் பாதையில் நான் சேர்வேனோ

ஆண் : யார் இனியென் வேதனைகள் கேட்டிருப்பாரோ
புன்னகைக்கும் நேரம் எனை பார்த்திருப்பாரோ
தாவரங்கள் நூறிருந்தால் ஓர் வனமாகும்
ஓர் இலை நான் என் நிலையோ இனி இருளாகும்

ஆண் : மாயஉலகிலே எனை வாட்டும் தனிமையே
போதும் எனையும் மாய்த்திடுவாயோ

ஆண் : தள்ளாடும் நெஞ்சே தள்ளாடும் நெஞ்சே
போதும் போதும் இனி புறப்படு
எல்லாமும் இங்கே இல்லாமல் போனால்
பாதை வரும் அதில் உயிர் விடு

ஆண் : போகாதே என்று சொன்னாலும் காலம்
தூரம் செல்ல நீயும் துணிந்திடு
வர்ணங்கள் இல்லா வானவில் போல
கலைந்தேனே நானும் தான் உலகிலே
ஒளி இன்றி நாளும் இருளாகி போனேன்
இனி எந்தன் வழி தேடி நான் போகிறேன்
நான் போகிறேன் நான் போகிறேன்
உன் பாதையில் தான் நான் வீழ்கிறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here