Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Thendralae thendralae nee ennai naadi vaa
Vaazhalaam vaazhalaam vaasalai thedi vaa
Mayakkum vilainthidum maalaiyil
Malargal virinthidum cholaiyil
Thendralae thendralae nee ennai naadi vaa
Vaazhalaam vaazhalaam vaasalai thedi vaa
Vaanampaadigal polavae gaanam paadiya naatgalae
Odum megangal polavae odi ponathu kaattrilae
Male : Pirintha pin koodinaal pesavum thondrumo
Paarvaigal yaavumae vaarththaigal aagumo
Female : Netru vaadiya thamarai meendum pooththidumo
Thendralae thendralae thenisai paadivaa
Sogangal theerppathun raagangal allavaa
Male and Female : …………….
Rajamaaligai vaasamum raagamaligai paadalum
Kaatchi maariya kaaranam kaala devanin naadagam
Male : Veroru paadalai saernthathu raagamae
Aayinum en manam vaazhththukkal koorumae
Kaanal neeril maangalin thaagam theernthidumo
Thendralae thendralae nee ennai naadi vaa
Vaazhalaam vaazhalaam vaasalai thedi vaa
Female : Mayakkum vilainthidum maalaiyil
Malargal virinthidum cholaiyil
Thendralae thendralae thenisai paadivaa
Female : Sogangal theerppathun raagangal allavaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா
வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா
மயக்கும் விளைந்திடும் மாலையில்
மலர்கள் விரிந்திடும் சோலையில்....
ஆண் : தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா
வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா
பெண் : வானம்பாடிகள் போலவே கானம் பாடிய நாட்களே
ஓடும் மேகங்கள் போலவே ஓடி போனது காற்றிலே
ஆண் : பிரிந்த பின் கூடினால் பேசவும் தோன்றுமோ
பார்வைகள் யாவுமே வார்த்தைகள் ஆகுமோ
பெண் : நேற்று வாடிய தாமரை மீண்டும் பூத்திடுமோ
பெண் : தென்றலே தென்றலே தேனிசை பாடிவா
சோகங்கள் தீர்ப்பதுன் ராகங்கள் அல்லவா
ஆண் மற்றும் பெண் : .......................
பெண் : ராஜமாளிகை வாசமும் ராகமாளிகை பாடலும்
காட்சி மாறிய காரணம் கால தேவனின் நாடகம்
ஆண் : வேறோரு பாடலை சேர்ந்தது ராகமே
ஆயினும் என் மனம் வாழ்த்துக்கள் கூறுமே
கானல் நீரில் மான்களின் தாகம் தீர்ந்திடுமோ
ஆண் : தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா
வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா
பெண் : மயக்கும் விளைந்திடும் மாலையில்
மலர்கள் விரிந்திடும் சோலையில்
ஆண் : தென்றலே தென்றலே தேனிசை பாடிவா
பெண் : சோகங்கள் தீர்ப்பதுன் ராகங்கள் அல்லவா