Singers : Swetha Mohan and Mukesh Mohamed

Music Director : S. A. Raj Kumar

Lyricist : Anthiyur Nithya

Male : Vaa vaa vennilave
Vaa vaa vennilave
Female : Vaa vaa vennilave
Vaa vaa vennilave

Male : Paalai nilathin vellai nilaa
Neidhal nilathin muthu nilaa
Female : Marudham mullai kurunji nilangal
Aala vandha aasai nilaa

Male : Vaa vaa vennilave
Vaa vaa vennilave

Female : Maamooi
Saapida varuvingalaa
Male : Nee saapitiyaa
Female : Neenga saapidaama naan
Eppadi mama sapidrathu
Male : Sollavaa..aang
Malligai poo nira saadhatha
Vaazhanira kaiyil eduthu
Thaamrai poo nira vaayila pottu
Muthu nira pallula mennu saapidanum

Male : Thaenundu thinaiyundu
Tamil pesum kiliyundu
Kurunji nilam undu
Female : Kurunji nilam undu
Muyalundu maan undu
Thirumaalin arul undu
Mullai vanam undu
Male : Mullai vanam undu

Male : Annam pol nadai chinna thamarai
Unnai marutham vaazhthumae
Thaazhampoovinai muthu punnagai
Unani neidhal pottrumae
Paalai nilamum ezhaiyillai
Un paarvai apttaal pookkumae

Female : Vaa vaa vennilave
Vaa vaa vennilave
Vaa vaa vennilave
Vaa vaa vennilave

Humming : ……………….

Male : Malaiyendrum kaadendrum
Vayal endrum kadal endrum
Nilangal aindhu sol
Female : Udan paalai serthu sol

Male : Thinai yenrum varagendrum
Nellendrum meen endrum
Unavu aindhu sol
Female : Andha paalai unavum sol

Male : Paalai nilamoru ezhai nilamadi
Endhan maaman polathaan
Female : Angu pookumae chinna paathiri
Endhan anbai pola thaan
Aasai noolil aadum aththaan
En aindhu nilamum unakku thaan

Dialogue : ……………

Male : Vaa vaa vennilave
Vaa vaa vennilave
Female : Vaa vaa vennilave
Vaa vaa vennilave

Male : Paalai nilathin vellai nilaa
Neidhal nilathin muthu nilaa
Marudham mullai kurunji nilangal
Kaati thandha kaadhal nilaa

Male : Vaa vaa vennilave
Vaa vaa vennilave
Both : Vaa vaa vennilave
Vaa vaa vennilave

பாடகர்கள் : ஸ்வேத்தா மோகன் மற்றும் முகேஷ் முகமத்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடல் ஆசிரியர் : அந்தியூர் நித்யா

ஆண் : வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே
பெண் : வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே

ஆண் : பாலை நிலத்தின் வெள்ளை நிலா
நெய்தல் நிலத்தின் முத்து நிலா
பெண் : மருதம் முல்லை குறிஞ்சி நிலங்கள்
ஆள வந்த ஆசை நிலா

ஆண் : வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே…

பெண் : மாமோய்….
சாப்பிட வருவீங்களா
ஆண் : நீ சாப்பிட்டியா…..
பெண் : நீங்க சாப்பிடாம நான்
எப்படி மாமா சாப்பிடறது
ஆண் : சொல்லவா……ஆங்….
மல்லிகைப்பூ நிற சாதத்த
வாழைத்தண்டு நிறக் கையில் எடுத்து
தாமரைப்பூ நிற வாயிலப் போட்டு
முத்து நிறப் பல்லுல மென்னு சாப்பிடனும்…

ஆண் : தேனுண்டு தினையுண்டு
தமிழ் பேசும் கிளியுண்டு
குறிஞ்சி நிலம் உண்டு
பெண் : குறிஞ்சி நிலம் உண்டு
முயலுண்டு மானுண்டு
திருமாலின் அருளுண்டு
முல்லை வனம் உண்டு
ஆண் : முல்லை வனம் உண்டு

ஆண் : அன்னம் போல் நடை சின்னத் தாமரை
உன்னை மருதம் வாழ்த்துமே
தாழம்பூவினை முத்து புன்னகை
உன்னை நெய்தல் போற்றுமே
பாலை நிலமும் ஏழையில்லை
உன் பார்வை பட்டால் பூக்குமே

பெண் : வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே….

முனங்கல் : ……………….

ஆண் : மலையென்றும் காடென்றும்
வயலென்றும் கடலென்றும்
நிலங்கள் ஐந்து சொல்
பெண் : உடன் பாலை சேர்த்து சொல்

ஆண் : தினையென்றும் வரகென்றும்
நெல்லென்றும் மீனென்றும்
உணவு ஐந்து சொல்
பெண் : அந்த பாலை உணவும் சொல்

ஆண் : பாலை நிலமொரு ஏழை நிலமடி
எந்தன் மாமன் போலத்தான்
பெண் : அங்கு பூக்குமே சின்னப்பாதிரி
எந்தன் அன்பை போலத்தான்
ஆசை நூலில் ஆடும் அத்தான்
என் ஐந்து நிலமும் உனக்குத்தான்

வசனம் : ……………

ஆண் : வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே
பெண் : வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே

ஆண் : பாலை நிலத்தின் வெள்ளை நிலா
நெய்தல் நிலத்தின் முத்து நிலா
மருதம் முல்லை குறிஞ்சி நிலங்கள்
காட்டி தந்த காதல் நிலா

ஆண் : வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே…
இருவர் : வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here