Singer : Seerkazhi Govindarajan

Music by : M. S. Vishwanathan

Male : Panathukko paal mayakkam
Pasitharvkko koozh mayakkam
Gunathukko kaalamellaam
Kuraiyadha madhi mayakkam

Male : Mayakkam thelindhavargal
Manadhaara ondru pattar
Vidhi mayakkam theeradhoo
Veedondru amaiyaadhoo

Male : Vaanam boomi naduvinil ulagam
Vaazhbavarkellaam naangu suvargal
Vaanam boomi naduvinil ulagam
Vaazhbavarkellaam naangu suvargal

Male : Pirakkum bodhu manidhargal ondru
Valarum bodhu maaruvadhundu
Kaalam neram soozhnilaiyaalae
Kalvan valarnthaan boomiyin melae

Chorus : .……………………….

Male : Vaanam boomi naduvinil ulagam
Vaazhbavarkellaam naangu suvargal

Male : Vayiru pasithaal nallavan thirudan
Vaazhvai izhandhaal maedhaiyum kurudan
Irandu vargam irukkum varaikkum
Irandu gunangalum irundhae theerum

Chorus : ………………………

Whistling : ………………………

Male : Vaanam boomi naduvinil ulagam
Vaazhbavarkellaam naangu suvargal

Chorus : ………………………..

Male : Manidhan vaazhkai megangal polae
Samuga vaazhvoo sakkaram polae
Sendra kaalam anubhavam aagum
Serum neram olimayamaagum

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பணத்துக்கோ பால் மயக்கம்
பசித்தவர்க்கோ கூழ் மயக்கம்
குணத்துக்கோ காலமெல்லாம்
குறையாத மதி மயக்கம்

ஆண் : மயக்கம் தெளிந்தவர்கள்
மனதார ஒன்று பட்டார்
விதி மயக்கம் தீராதோ
வீடொன்று அமையாதோ…..

ஆண் : வானம் பூமி நடுவினில் உலகம்
வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்
வானம் பூமி நடுவினில் உலகம்
வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்

ஆண் : பிறக்கும்போது மனிதர்கள் ஒன்று
வளரும்போது மாறுவதுண்டு
காலம் நேரம் சூழ்நிலையாலே
கள்வன் வந்தான் பூமியின் மேலே

குழு : …………………………….

ஆண் : வானம் பூமி நடுவினில் உலகம்
வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்

ஆண் : வயிறு பசித்தால் நல்லவன் திருடன்
வாழ்வை இழந்தால் மேதையும் குருடன்
இரண்டு வர்க்கம் இருக்கும் வரைக்கும்
இரண்டு குணங்களும் இருந்தே தீரும்…..

குழு : …………………………..

விசில் : ………………………………..

ஆண் : வானம் பூமி நடுவினில் உலகம்
வாழ்பவர்க்கெல்லாம் நான்கு சுவர்கள்

குழு : ………………………….

ஆண் : மனிதன் வாழ்க்கை மேகங்கள் போலே
சமூக வாழ்வோ சக்கரம் போலே
சென்ற காலம் அனுபவமாகும்
சேரும் நேரம் ஒளிமயமாகும்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here