Singers : Malaysia Vasudevan and L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Female : Mai paarththa kannazhagi meenaatchi ammanukku
Kai paarththu kuri uraichcha kuravar kulam engal kulam
Male : Kuriniji pooththirukka koottamaa vandu vanthu
Urinjae thaen kudikkum suruli mala enga mala
Aa….aa….aa….aa….aa…aa….aa….
Female : Valliyammai vantha kulam enga kulamthaan
Naanga vaazhurathum ava purusha thantha palamthaan
Valliyammai vantha kulam enga kulamthaan
Naanga vaazhurathum ava purusha thantha palamthaan
Male : Neelakandan vesham kudichchaan
Neeli palamthaan thirisooli palamthaan
Neelakandan vesham kudichchaan
Neeli palamthaan thirisooli palamthaan
Female : Avaru nirantharamaa irukkurathum thaali palamthaan
Aaththaa thaali palamthaan
Avaru nirantharamaa irukkurathum thaali palamthaan
Aaththaa thaali palamthaan
Female : Valliyammai vantha kulam enga kulamthaan
Naanga vaazhurathum ava purusha thantha palamthaan
Male : Aah
Chorus : Valliyammai vantha kulam enga kulamthaan
Naanga vaazhurathum ava purusha thantha palamthaan
Chorus : ………………..
Male : Ulunthooru pettaiyilum
Udumalaiyan kottaiyilum
Kadampooru santhaiyilum koottam kooduvom
Naanga aattam aaduvom
Chorus : Takkudikkaam damukkudikkaam
Damukku dippaan diyaalo
Paasimani pavalamani vaangi paaru aayaalo
Takkudikkaam damukkudikkaam
Damukku dippaan diyaalo
Paasimani pavalamani vaangi paaru aayaalo
Male : Aa….aa….aa….aa….aa….aa….aa….
Male : Ulunthooru pettaiyilum
Udumalaiyan kottaiyilum
Kadampooru santhaiyilum koottam kooduvom
Naanga aattam aaduvom
Female : {Entha ooru sonth ooru
Ellaa oorum ena ooru
Engalukkum kanji ooththa
Bhoomiyum undu sivagaamiyum undu} (2)
Both : Valliyammai vantha kulam enga kulamthaan
Naanga vaazhurathum ava purusha thantha palamthaan
Male : Aah
Chorus : ………………..
Male : {Engakitta ponneduththa
Yaerumayil murugaananthan
Eendreuththa thaayirukkaa
Aanaikkaavilae thiruvaanaikkaavilae} (2)
Female : Sangadangal vaaraamae samayaththilae kaappaaththa
Angirukkum thaayavalai kumbiduvomae
Naanga nambiduvomae
Male : Aamaa
Female : Sangadangal vaaraamae samayaththilae kaappaaththa
Angirukkum thaayavalai kumbiduvomae
Naanga nambiduvomae
Both : Valliyammai vantha kulam enga kulamthaan
Naanga vaazhurathum ava purusha thantha palamthaan
Male : Aah
Chorus : ………………..
Male : Podu
Chorus : ………………..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எல். ஆர் ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : மை பார்த்த கண்ணழகி மீனாட்சி அம்மனுக்கு
 கை பார்த்து குறி உரைச்ச குறவர் குலம் எங்கள் குலம்
 ஆண் : குறிஞ்சிப்பூ பூத்திருக்க கூட்டமா வண்டு வந்து
 உறிஞ்சே தேன் குடிக்கும் சுருளி மல எங்க மல
 ஆ…ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..
பெண் : வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான்
 நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்
 வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான்
 நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்
ஆண் : நீலகண்டன் வெஷம் குடிச்சான்
 நீலி பலம்தான் திரிசூலி பலம்தான்
 நீலகண்டன் வெஷம் குடிச்சான்
 நீலி பலம்தான் திரிசூலி பலம்தான்
பெண் : அவரு நிரந்தரமா இருக்குறதும் தாலி பலம்தான்
 ஆத்தா தாலி பலம்தான்…
 அவரு நிரந்தரமா இருக்குறதும் தாலி பலம்தான்
 ஆத்தா தாலி பலம்தான்…
பெண் : வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான்
 நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்
 ஆண் : ஆஹ்
 குழு : வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான்
 நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்
குழு : …………………………
ஆண் : உளுந்தூரு பேட்டையிலும்
 உடுமலையன் கோட்டையிலும்
 கடம்பூரு சந்தையிலும் கூட்டம் கூடுவோம்
 நாங்க ஆட்டம் ஆடுவோம்
குழு : டக்குடிக்காம் டமுக்குடிக்காம்
 டமுக்கு டிப்பான் டியாலோ
 பாசிமணி பவளமணி வாங்கி பாரு ஆயாலோ
 டக்குடிக்காம் டமுக்குடிக்காம்
 டமுக்கு டிப்பான் டியாலோ
 பாசிமணி பவளமணி வாங்கி பாரு ஆயாலோ
ஆண் : ஆ…ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..
 உளுந்தூரு பேட்டையிலும்
 உடுமலையன் கோட்டையிலும்
 கடம்பூரு சந்தையிலும் கூட்டம் கூடுவோம்
 நாங்க ஆட்டம் ஆடுவோம்
பெண் : {எந்த ஊரு சொந்த ஊரு
 எல்லா ஊரும் எங்க ஊரு
 எங்களுக்கும் கஞ்சி ஊத்த
 பூமியும் உண்டு சிவகாமியும் உண்டு} (2)
இருவர் : வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான்
 நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்….
 ஆண் : ஆஹ்
குழு : ………………………………
ஆண் : {எங்ககிட்ட பொண்ணெடுத்த
 ஏறுமயில் முருகனத்தான்
 ஈன்றெடுத்த தாயிருக்கா
 ஆனைக்காவிலே திருவானைக்காவிலே} (2)
பெண் : சங்கடங்கள் வாராமே சமயத்திலே காப்பாத்த
 அங்கிருக்கும் தாயவளை கும்பிடுவோமே
 நாங்க நம்பிடுவோமே
 ஆண் : ஆமா….

ஆண் : போடு
 குழு : ………………………………