Singer : P. Susheela

Music by : Raveendran and Gangai Amaran

Lyrics by : Thirupathooran

Female : Vaammaa devi baambin vadivaaga
Chorus : Thanthana thanthana thanthana thanthan thaanathannnaa
Thana thanthaananaa thanthaananaa thanthaanaaanaa
Thanthana thanthana thanthana thanthan thaanathannnaa
Thana thanthaananaa thanthaananaa thanthaanaaanaa

Female : Vaammaa devi baambin vadivaaga
Nee vaazhum deivam kaattidu kanivaaga
Oru naaga sadhurththiyilae varum yoga thirumagalae
Un paatham poo vaiththu anbodu paal vaiththu
Oorodu kondaaduvom…

Female : Vaammaa devi baambin vadivaaga
Nee vaazhum deivam kaattidu kanivaaga
Chorus : Vaammaa devi paambin vadivaaga
Vaa vaa thaayae neeyae thunaiyaaga

Female : Annaikkoru annaiyena karumaari
Aval sirasaeri oru kudaiyaaga nindraai
Appan sivan kazhuththukku nagaiyaanaai
Magan vadivelan palar adi pottri vanthaai

Female : Naalu kizhamaiyum unakkena padaikka
Paalum kidaikkalaiyae
Naagasathurththiyaithaan kumbida
Intha yaezhaikku vazhiyillaiyae

Female : Kanni ponnukku purushan varamum
Kattukkukazhuththikku pillai varamum
Kuzhanthai kuttikku selvam varamum
Kudumbam sezhikka kodukka

Female : Vaammaa devi baambin vadivaaga
Nee vaazhum deivam kaattidu kanivaaga

Female : Sriraman thirunaamam thalai thaangi
Arul varam vaangi antha thirumaal pol nindraai
Nadarajan perumaan pol nadamaadi
Nee vilaiyaadi oru sivathaandavam seithaai

Female : Thooimai ullavar kulam thanai kaakkum
Thaaimaiyaanavalae
Antha thaaimai idhayam ullavar munbu
Saei pol varupavalae

Female : Nallavar vallavar naanayam ullavar
Nammaiyil unmaiyil nambikkai kondavar
Anbilum panbilum anantham kandavar
Arinthu therinthu vaazhnthida

Female : Vaammaa devi baambin vadivaaga
Nee vaazhum deivam kaattidu kanivaaga
Oru naaga sadhurththiyilae varum yoga thirumagalae
Un paatham poo vaiththu anbodu paal vaiththu
Oorodu kondaaduvom…

Female : Vaammaa devi baambin vadivaaga
Nee vaazhum deivam kaattidu kanivaaga

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ரவீந்தரன் மற்றும் கங்கை அமரன்

பாடலாசிரியர் : திருபத்தூரன்

பெண் : வாம்மா தேவி பாம்பின் வடிவாக
குழு : தந்தன தந்தன தந்தன தந்தன தானதன்னானா
தன தந்தானனா தந்தானனா தந்தானனானா…
தந்தன தந்தன தந்தன தந்தன தானதன்னானா
தன தந்தானனா தந்தானனா தந்தானனானா

பெண் : வாம்மா தேவி பாம்பின் வடிவாக
நீ வாழும் தெய்வம் காட்டிடு கனிவாக
ஒரு நாக சதுர்த்தியிலே வரும் யோக திருமகளே
உன் பாதம் பூ வைத்து அன்போடு பால் வைத்து
ஊரோடு கொண்டாடுவோம்….

பெண் : வாம்மா தேவி பாம்பின் வடிவாக
நீ வாழும் தெய்வம் காட்டிடு கனிவாக..
குழு : வாம்மா தேவி பாம்பின் வடிவாக
வா வா தாயே நீயே துணையாக

பெண் : அன்னைக்கொரு அன்னையென கருமாரி..
அவள் சிரசேறி ஒரு குடையாக நின்றாய்
அப்பன் சிவன் கழுத்துக்கு நகையானாய்
மகன் வடிவேலன் பலர் அடி போற்றி வந்தாய்

பெண் : நாளும் கிழமையும் உனக்கென படைக்க
பாலும் கிடைக்கலையே
நாகசதுர்த்தியை தான் கும்பிட
இந்த ஏழைக்கு வழியில்லையே

பெண் : கன்னி பொண்ணுக்கு புருஷன் வரமும்
கட்டுக்கழுத்திக்கு பிள்ளை வரமும்
குழந்தை குட்டிக்கு செல்வம் வரமும்
குடும்பம் செழிக்க கொடுக்க…

பெண் : வாம்மா தேவி பாம்பின் வடிவாக
நீ வாழும் தெய்வம் காட்டிடு கனிவாக..

பெண் : ஸ்ரீராமன் திருநாமம் தலை தாங்கி
அருள் வரம் வாங்கி அந்த திருமால் போல் நின்றாய்
நடராஜன் பெருமான் போல் நடமாடி
நீ விளையாடி ஒரு சிவதாண்டவம் செய்தாய்

பெண் : தூய்மை உள்ளவர் குலம் தனைக் காக்கும்
தாய்மையானவளே
அந்த தாய்மை இதயம் உள்ளவர் முன்பு
சேய் போல் வருபவளே

பெண் : நல்லவர் வல்லவர் நாணயம் உள்ளவர்
நம்மையில் உண்மையில் நம்பிக்கை கொண்டவர்
அன்பிலும் பண்பிலும் ஆனந்தம் கண்டவர்
அறிந்து தெரிந்து வாழ்த்திட

பெண் : வாம்மா தேவி பாம்பின் வடிவாக
நீ வாழும் தெய்வம் காட்டிடு கனிவாக
ஒரு நாக சதுர்த்தியிலே வரும் யோக திருமகளே
உன் பாதம் பூ வைத்து அன்போடு பால் வைத்து
ஊரோடு கொண்டாடுவோம்….

பெண் : வாம்மா தேவி பாம்பின் வடிவாக
நீ வாழும் தெய்வம் காட்டிடு கனிவாக…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here