Singer : P. Leela
Music by : R. Govarthanam
Lyrics by : Kannadasan
Vettunda kaiyum
Veezhndhu vitta poongodiyum
Kattunduthaan vanangum
Kanniyargal ponadiyai
Koon vilundha maanidargal
Kuvindhirukkum samudhayam
Thaan vilundhu vanangum naal
Thalaimuraiyil vaarathatho
Poluthu vidiyaadho
Pudhu paadhai thondratho
Azhuthazhudhu kanniyargal
Alarum naal maaradhadho
Pazhudhupadaa uthamanae
Panbumigum kanniyanae
Viludhu vida veitha maram
Vilunthuvittaal sammadhamo
Maalaiyitta mangaiyarukku
Vaazhvil orae vazhithaan
Thaal pidithu ketpaayoo
Thalai kunindhu azhaipaayoo
Thangaiyinai vaazha vaikka
Thayangaadhae purapattu nee
Vettunda kaiyum
Veezhndhu vitta poongodiyum
Kattunduthaan vanangum
Kanniyargal ponadiyai
Koon vilundha maanidargal
Kuvindhirukkum samudhayam
Thaan vilundhu vanangum naal
Thalaimuraiyil vaarathatho
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : வெட்டுண்ட கையும்
வீழ்ந்துவிட்ட பூங்கொடியும்
கட்டுண்டுதான் வணங்கும்
கன்னியர்கள் பொன்னடியை
பெண் : கூன் விழுந்த மானிடர்கள்
குவிந்திருக்கும் சமுதாயம்
தான் விழுந்து வணங்கும் நாள்
தலைமுறையில் வாராதோ.....
பெண் : பொழுது விடியாதோ
புதுப்பாதை தோன்றாதோ
அழுதழுது கன்னியர்கள்
அலறும் நாள் மாறாதோ
பெண் : பழுதுபடா உத்தமனே
பண்புமிகும் கண்ணியனே
விழுது விட வைத்த மரம்
விழுந்துவிட்டால் சம்மதமோ.....
பெண் : மாலையிட்ட மங்கையர்க்கு
வாழ்வில் ஒரேவழிதான்
தாள் பிடித்துக் கேட்பாயோ
தலை குனிந்து அழைப்பாயோ
தங்கையினை வாழ வைக்கத்
தயங்காதே புறப்பட்டு நீ.......
பெண் : வெட்டுண்ட கையும்
வீழ்ந்துவிட்ட பூங்கொடியும்
கட்டுண்டுதான் வணங்கும்
கன்னியர்கள் பொன்னடியை
பெண் : கூன் விழுந்த மானிடர்கள்
குவிந்திருக்கும் சமுதாயம்
தான் விழுந்து வணங்கும் நாள்
தலைமுறையில் வாராதோ.....