Singers : Stephen Zechariah and Ft Rakshita Suresh

Music by : Stephen Zechariah

Male : Neerillaa nilamaagi ponen
Verillaa maramaagi ponen
Katrillaa theeyaagi ponenae
Neerillaa nilamaagi ponen
Verillaa maramaagi ponen
Katrillaa theeyaagi ponenae

Male : Mayangugiren un vizhiyil
Nee podhum en vazhiyil
Serndhu vidu en uyiril
Neethaanae en vidiyal

Male : Vilagaathae anbae neeyum
Neethaan en nijamummadi
Unnodaiya nizhalaai irunthum
Thaniyaaga nikkurendi
Thalai kotha undhan madiyil
Naan saaya vendumadi
Un arugil vaazhnthal pothum
En saabam theerumadi

Dialogue : ……………………

Male : Hmm….
Enai parthu maraiyum nilavu
Kalaiyaadha nee en kanavu
Vizhi moodi thoongum munnae
Vazhi seruthae

Female : Enakkaaga eriyum kathirae
En vaazhvil ozhi thanthaayae
Nee indri en boomi irul aanathae

Male : Mann serum mazhai kooda
Vaan sera vendumae
Oru thuli naam sera
Kadal vendumae

Male : Kaadhal poi illaiyae
Kaalam mei illaiyae
Unnai kaanum varai
Unmai ingu illaiyae

Female : Oru kural azhaikutho
Athu unnai ketkutho
Male : Oru kural azhaikutho
Athu nee endru en uyir solluthooo…

Female : Vilagaathae anbae neeyum
Neethaan en nijamummada
Unnodaiya nizhalaai irunthum
Thaniyaaga nikkurenda
Thalai kotha undhan madiyil
Naan saaya vendumada
Un arugil vaazhnthal pothum
En saabam theerumada

Male : Neerillaa nilamaagi ponen
Verillaa maramaagi ponen
Katrillaa theeyaagi ponenae

Dialogue : ……………

Male : Puriyatha kavithaiyil pizhaiya
Thavarukku kaadhal vilaiya
Pizhai illa manithan endraal
Iraivan illaiya

Female : Karai vanthu seraa alaiya
Devathaiyin idhayam silaiya
Kallai kooda kaadhal endru
Karaipathu illaiya

Female : Pralayathil nilam kooda
Nizhai maari pogumae
Naan adhil irunthaalum
Unai seruven

Male : Karavuttra ganamae naan
Un uyir thedinen
Uyirae piriyathae

Female : Vaa arugilae
Thaaiye pol thaangava
Male : Un madiyilae
Mazhalai pol thavizhava

Female : Mayangi vitten un vizhiyil
Naan varuven un vazhiyil
Kalanthu vitten un uyiril
Neethaanae kadalinai mazhaiyinai
Thaandiyae varavaaiyae

Male : Vilagaathae anbae neeyum
Neethaan en nijamummadi
Unnodaiya nizhalaai irunthum
Thaniyaaga nikkurendi
Thalai kotha undhan madiyil
Naan saaya vendumadi
Un arugil vaazhnthal pothum
En saabam theerumadi

Male : Vilagaathae vittu vilagaathae
Ennai piriyaathae anbae
Vilagaathae vittu vilagaathae
Ennai piriyaathae anbae

Female : ……………..
Male : Vilagaathae vittu vilagaathae
Ennai piriyaathae anbae
Vilagaathae vittu vilagaathae
Ennai piriyaathae anbae

பாடகர்கள் : ஸ்டீபன் சக்ரியா மற்றும் பிட். ரக்ஷிதா சுரேஷ்

இசையமைப்பாளர் : ஸ்டீபன் சக்ரியா

ஆண் : நீரில்லா நிலமாகி போனேன்
வேரில்லா மரமாகி போனேன்
காற்றில்லா தீயாகி போனேனே
நீரில்லா நிலமாகி போனேன்
வேரில்லா மரமாகி போனேன்
காற்றில்லா தீயாகி போனேனே

ஆண் : மயங்குகிறேன் உன் விழியில்
நீ போதும் என் வழியில்
சேர்ந்துவிடு என் உயிரில்
நீதானே என் விடியல்

ஆண் : விலகாதே அன்பே நீயும்
நீதான் என் நிஜமுமடி
உன்னுடைய நிழலாய் இருந்தும்
தனியாக நிக்குறேன்டி
தலைக்கோதும் உந்தன் மடியில்
நான் சாய வேண்டுமடி
உன்னருகில் வாழ்ந்தால் போதும்
என் சாபம் தீருமடி

வசனம் : ………………………..

ஆண் : ஹ்ம்ம்…..
என்னை பார்த்து மறையும் நிலவு
கலையாத நீ என் கனவு
விழிமூடி தூங்கும் முன்னே
வலி சேருதே

பெண் : எனக்காக எரியும் கதிரே
என் வாழ்வில் ஒளி தந்தாயே
நீ இன்றி என் பூமி இருளானதே

ஆண் : மண் சேரும் மழை கூட
வான் சேர வேண்டுமே
ஒரு துளி நாம் சேர
கடல் வேண்டுமே

ஆண் : காதல் பொய்யில்லையே
காலம் நீ இல்லையே
உன்னை தாங்கும் வரை
உண்மை இங்கில்லையே

பெண் : ஒரு குரல் அலைக்குதோ
அது உன்னை கேட்குதோ
ஆண் : ஒரு குரல் அலைக்குதோ
அது நீ என்று என் உயிர் சொல்லுதோ

பெண் : விலகாதே அன்பே நீயும்
நீதான் என் நிஜமுமடா
உன்னுடைய நிழலாய் இருந்தும்
தனியாக நிக்குறேன்டா
தலைக்கோதும் உந்தன் மடியில்
நான் சாய வேண்டுமடா
உன்னருகில் வாழ்ந்தால் போதும்
என் சாபம் தீருமடா

ஆண் : நீரில்லா நிலமாகி போனேன்
வேரில்லா மரமாகி போனேன்
காற்றில்லா தீயாகி போனேனே

வசனம் : ……………………

ஆண் : புரியாத கவிதையில் பிழையா
தவறுக்கு காதல் விலையா
பிழை இல்லா மனிதன் என்றால்
இறைவன் இல்லையா

பெண் : கரைவந்து சேரா அலையா
தேவதையின் இதயம் சிலையா
கல்லை கூட காதல் என்று
கரைப்பதில்லையா

பெண் : பிரளயத்தில் நிலம் கூட
நிலை மாறி போகுமே
நான் அதில் இருந்தாலும்
உன்னை சேருவேன்

ஆண் : கருவுற்ற கணமே நான்
உன் உயிர் தேடினேன்
உயிரே பிரியாதே

பெண் : வா அருகிலே
தாயை போல் தாங்கவா
ஆண் : உன் மடியிலே
மழலை போல் தவிழவா

பெண் : மயங்கிவிட்டேன் உன் விழியில்
நான் வருவேன் உன் வழியில்
கலந்துவிட்டேன் உன் உயிரில்
நீதானே கடலினை மலையினை
தாண்டியும் வருவாயா

ஆண் : விலகாதே அன்பே நீயும்
நீதான் என் நிஜமுமடி
உன்னுடைய நிழலாய் இருந்தும்
தனியாக நிக்குறேன்டி
தலைக்கோதும் உந்தன் மடியில்
நான் சாய வேண்டுமடி
உன்னருகில் வாழ்ந்தால் போதும்
என் சாபம் தீருமடி

ஆண் : விலகாத விட்டு விலகாத
என்னை பிரியாதே அன்பே
விலகாத விட்டு விலகாத
என்னை பிரியாதே அன்பே

பெண் : ……………………
ஆண் : விலகாத விட்டு விலகாத
என்னை பிரியாதே அன்பே
விலகாத விட்டு விலகாத
என்னை பிரியாதே அன்பே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here