Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Aariro aariraro
Aariro aariraro
Naan yaaro nee yaaro
Ungammaa yaro appaa yaro
Kannu yaaro mookku yaaro kaadhu yaaro
Male : Ada koppan maganae
Mummy unakku dummythaanappaa
Edam thappaa poranthanthathai ippo nenachchu
Azhuvathu yaenappaa…..azhuvathu yaenappaa
Male : Ada koppan maganae
Mummy unakku dummythaanappaa
Edam thappaa poranthanthathai ippo nenachchu
Azhuvathu yaenappaa…..azhuvathu yaenappaa
Male : Paalootta theriyala seeraatta theriyala
Thaalaatta theriyala poraalae veliyilae
Avalaa ongammaa nee azhaama thoongappaa
Avalaa ongammaa nee azhaama thoongappaa
Aariro aariraro
Paaloota yaaraachchum vaareeyalaa
Aariro aariraro
Paaloota yaaraachchum vaareeyalaa
Male : Kadavul idhilae unakkum uravo
Avanin ammaa appaa evaro
Kadavul idhilae unakkum uravo
Avanin ammaa appaa evaro
Avarae oru naal thaayum aanaar
Umaiyaal paalil samanthar vaazhnthaar
Male : Thaayaarai kaanaamalae
Yaar yaaro vaazhnthaaradaa
Aiyyaavin kaipaalilae
Medhaigal aanaaradaa….
Male : Paalootta theriyala seeraatta theriyala
Thaalaatta theriyala poraalae veliyilae
Avalaa ongammaa nee azhaama thoongappaa
Avalaa ongammaa nee azhaama thoongappaa
Aariro aariraro
Paaloota yaaraachchum vaareeyalaa
Male : Ada koppan maganae
Mummy unakku dummythaanappaa
Edam thappaa poranthanthathai ippo nenachchu
Azhuvathu yaenappaa…..azhuvathu yaenappaa
Male : Thaaimai uravae thamizhin magimai
Thaayin madiyil amarnthaal perumai
Thaaimai uravae thamizhin magimai
Thaayin madiyil amarnthaal perumai
Unakko oruththi irunthum illai
Unakko neethaan uravin ellai
Male : Kallaana ammaavai nee
Kannaalum paaraathedaa
Aiyyaa un vaazhnaalilae
Amma endrazhaikkathaedaa
Male : Paalootta theriyala seeraatta theriyala
Thaalaatta theriyala poraalae veliyilae
Avalaa ongammaa nee azhaama thoongappaa
Avalaa ongammaa nee azhaama thoongappaa
Aariro aariraro
Paaloota yaaraachchum vaareeyalaa
Aariro aariraro
Aariro aariraro aariraro aariraro
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஆரிரோ ஆரிரரோ
 ஆரிரோ ஆரிரரோ
 நான் யாரோ நீ யாரோ
 உங்கம்மா யாரோ அப்பா யாரோ
 கண்ணு யாரோ மூக்கு யாரோ காது யாரோ
ஆண் : அட கொப்பன் மகனே
 மம்மி ஒனக்கு டம்மிதானப்பா
 எடம் தப்பா பொறந்ததை இப்போ நெனச்சு
 அழுவது ஏனப்பா…..அழுவது ஏனப்பா…..
ஆண் : அட கொப்பன் மகனே
 மம்மி ஒனக்கு டம்மிதானப்பா
 எடம் தப்பா பொறந்ததை இப்போ நெனச்சு
 அழுவது ஏனப்பா…..அழுவது ஏனப்பா…..
ஆண் : பாலூட்ட தெரியல சீராட்டத் தெரியல
 தாலாட்டத் தெரியல போறாளே வெளியிலே
 அவளா ஒங்கம்மா நீ அழாம தூங்கப்பா
 அவளா ஒங்கம்மா நீ அழாம தூங்கப்பா
 ஆரிரோ ஆரிரரோ
 பாலூட்ட யாராச்சும் வாரீயளா
 ஆரிரோ ஆரிரரோ
 பாலூட்ட யாராச்சும் வாரீயளா
ஆண் : கடவுள் இதிலே உனக்கும் உறவோ
 அவனின் அம்மா அப்பா எவரோ
 கடவுள் இதிலே உனக்கும் உறவோ
 அவனின் அம்மா அப்பா எவரோ
 அவரே ஒரு நாள் தாயும் ஆனார்
 உமையாள் பாலில் சம்மந்தர் வாழ்ந்தார்
ஆண் : தாயாரைக் காணாமலே
 யார் யாரோ வாழ்ந்தாரடா
 ஐயாவின் கைப்பாலிலே
 மேதைகள் ஆனாரடா……..
ஆண் : பாலூட்ட தெரியல சீராட்டத் தெரியல
 தாலாட்டத் தெரியல போறாளே வெளியிலே
 அவளா ஒங்கம்மா நீ அழாம தூங்கப்பா
 அவளா ஒங்கம்மா நீ அழாம தூங்கப்பா
 ஆரிரோ ஆரிரரோ
 பாலூட்ட யாராச்சும் வாரீயளா
ஆண் : அட கொப்பன் மகனே
 மம்மி ஒனக்கு டம்மிதானப்பா
 எடம் தப்பா பொறந்ததை இப்போ நெனச்சு
 அழுவது ஏனப்பா…..அழுவது ஏனப்பா…..
ஆண் : தாய்மை உறவே தமிழின் மகிமை
 தாயின் மடியில் அமர்ந்தால் பெருமை
 தாய்மை உறவே தமிழின் மகிமை
 தாயின் மடியில் அமர்ந்தால் பெருமை
 உனக்கோ ஒருத்தி இருந்தும் இல்லை
 உனக்கே நீதான் உறவின் எல்லை
ஆண் : கல்லான அம்மாவை நீ
 கண்ணாலும் பாராதேடா
 ஐயா உன் வாழ்நாளிலே
 அம்மா என்றழைக்காதேடா……
ஆண் : பாலூட்ட தெரியல சீராட்டத் தெரியல
 தாலாட்டத் தெரியல போறாளே வெளியிலே
 அவளா ஒங்கம்மா நீ அழாம தூங்கப்பா
 அவளா ஒங்கம்மா நீ அழாம தூங்கப்பா
 ஆரிரோ ஆரிரரோ
 பாலூட்ட யாராச்சும் வாரீயளா
 ஆரிரோ ஆரிரோ
 ஆரிரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ


