Mana Magizhndhen Song Lyrics is a track from Jaya Gopi Tamil Film – 1955, Starring V. Nagayya, G. Varalakshmi and Others. This song was sung by Jikki and AP. Komala and the music was composed by Viswanathan – Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் ஏபி கோமளா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : மன மகிழ்ந்தேன் மன மகிழ்ந்தேன்
என் அண்ணியின் காகிதம் கண்டேனே
ஒரு ஜோரான காகிதம் கண்டேனே
பெண் : மன மகிழ்ந்தேன் மன மகிழ்ந்தேன்
என் அண்ணியின் காகிதம் கண்டேனே
ஒரு ஜோரான காகிதம் கண்டேனே
பெண் : என் மதனி என்னை மறக்கவில்லை
தன் சேதிகளெல்லாம் தெரிவித்தாள்
தாய்ப் பாசம் தந்தாள் பலே பலே
என் மனதினில் அண்ணி நின்றாளே
தாய்ப் பாசம் தந்தாள் பலே பலே
என் மனதினில் அண்ணி நின்றாளே
பெண் : மன மகிழ்ந்தேன் மன மகிழ்ந்தேன்
என் அண்ணியின் காகிதம் கண்டேனே
ஒரு ஜோரான காகிதம் கண்டேனே
பெண் : என் மதனி இதில் சொன்னது போல
எல்லாம் அறிந்தே வாழ்வேனே
நேரினில் வந்தே நிற்பது போலே
காணுகின்றேனே என் முன்னே
நேரினில் வந்தே நிற்பது போலே
காணுகின்றேனே என் முன்னே
பெண் : என் மதனி பேரன்புடன்
உன்னை என்றும் பிரியேனே
பலே பக்தியில் பூஜிப்பேன்
ஆஹா தேவதை நீயென்பேன்
உன் புன்னகை முகமே பலே பலே
அதில் பாசமும் அன்பும் காணுகின்றேன்
பெண் : மன மகிழ்ந்தேன் மன மகிழ்ந்தேன்
என் அண்ணியின் காகிதம் கண்டேனே
ஒரு ஜோரான காகிதம் கண்டேனே
பெண் : ஓஒ….ஓ…ஓ…ஓஹ்….ஓ…ஓ….
பெண் : கண்ணான கோபி என் கைகளாலே
தினம் உன்னை வளர்ப்பேனே தாய் நானே
கண்ணான கோபி என் கைகளாலே
தினம் உன்னை வளர்ப்பேனே தாய் நானே
பெண் : என்னாளுமிங்கே உன்னை
பார்க்கும் ஆசையால்
என்னாளுமிங்கே உன்னை
பார்க்கும் ஆசையால்
மீறுதடா பாசமே என்றோ
நானும் காணுவேன்
மீறுதடா பாசமே என்றோ
நானும் காணுவேன்
பெண் : ஓஒ முத்துல கோபி ஒரு நாளே
இந்த கால விசாரமும் தீருமடா
ஜெயகோபி என் கோபி
எந்நாளிலும் உன்னை மறவேனே
எந்நாளிலும் உன்னை மறவேனே
பெண் : ஓஒ மதனி உன் அன்புக்கு பதிலா
எல்லாப் பரிசுகள் தருவேனே
பொம்மைகள் தருவேன்
பொன்னகை தருவேன்
சீனி மிட்டாய் தினம் தருவேன்
பொம்மைகள் தருவேன்
பொன்னகை தருவேன்
சீனி மிட்டாய் தினம் தருவேன்
பெண் : சுத்துற ரயிலு கொண்டு வந்தே
சுக் சுக் சுக் என் விடுவேன்
சுத்துற ரயிலு கொண்டு வந்தே
சுக் சுக் சுக் என் விடுவேன்
மகா வேகமாய் ஓட்டிடுவேன்
பலே விந்தைகள் காட்டிடுவேன்
பெண் : நீ முத்தங்கள் தருவாய் பலே பலே
நான் என்றும் உனையே மறவேனே
நான் என்றும் உனையே மறவேனே
