Than Manadhai Nalan Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by A. M. Raja, Seerkazhi Govindarajan and P. Leela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : A. M. Raja, Seerkazhi Govindarajan and P. Leela
Music Director : S. Rajeswara Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Haa…aa……haa….aaa
Haa…aa…aa…haa….haa
Male : Than manadhai nalanukku
Thaththam seidhaal
Andha thamayandhi vanmaiyudan
Suyamvaram natta munn vandhadhum
Vindhaiyandro
Male : Vinnavar naalvarum
Mannulagai naadi ammangaiyaalin
Ennamae yaadhena sodhanai seiyavvae
Viraindhu vaareer
Haa…aaa….aa..haa
Male : Vaazhga nalaraajanae vaanavar adhibanyaam
Varunan agni yeman ivargal andro
Male : Thanyanaanen amarar aagnai edhuvaanaalum
Kanyamudan yettru paniyaatruvenae
Male : Devargal naalvaril ezhil maevum oruvarai
Dhamayandhi maalaiyida pugazha vendum
Male : Suraraajan mozhi pola thavaraamal sollavae
Sundhariyin andhapuram elidhallavae
Male : Devargal thoodhanaai sellum bodhu
Thidamindri udal kundrum sandhegamaen
Siram meedhil idhai kondu sendridil
Uruvamae maraivaagum
Mayangaadhae viraindhaeguvaai
Haa…aaa….aa..haa
Haa…aaa….aa..haa
Female : Andhapuram naadi anumadhi illaamal
Anjaamal vandhadhaaroo ..haa…aaa
Andhapuram naadi anumadhi illaamal
Anjaamal vandhadhaaroo
Male : Amaryendhiran agniyum
Emaraajan varunarum
Anupiya thoodhanaam nalaraajanae
Avargalil oruavrai anbudan azhagiyae
Varanaaga pera vendumaam
Pennae varanaaga pera vendumaam
Female : Annathin thoodhaalae
Ummai ninaitha naan
Agilamae pirandaalaam maaruvaenoo
Male : Anbudanae ennai manandhaalum magizhndhaalum
Amarargal allalum naernthidaadhoo
Female : Allalai sugamaaullamae kanivodu
Anbudanae yettru kondu naane
Umakkae aavaludan maalai soottuvenae ….
Maalai soootuvenae
Female : Ethanai jenmamgal adiyaen eduthaalum
En kanavan nalanumandro
Innum ivvezhaiyin idhayam thhudikkavae
Sodhanai seivadhum aneedhiyandro
Female : Sathiyam nilaikkavae iththirai madhikkavae
Sadhi padhigalaai vaazhavae
Tharunamae urumaari kanavarai dharisikka
Karunaiyae puriya vendum
Haa….aaaa…aaa
Haa…aa…haa…
பாடகர்கள் : ஏ. எம். ராஜா, சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. லீலா
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : ஹா…ஆஅ…ஹா…ஆஅ…
ஹா…ஆஆ..ஆஅ..ஆ ஹா…ஹா …
ஆண் : தன் மனதை நளனுக்கு
தத்தம் செய்தாள்
அந்த தமயந்தி வன்மையுடன்
சுயம்வரம் நாட்ட முன் வந்ததும்
விந்தையன்றோ
ஆண் : விண்ணவர் நால்வரும்
மண்ணுலகை நாடி அம்மங்கையாளின்
எண்ணமே யாதெனச் சோதனை செய்யவே
விரைந்து வாரீர்…
ஹா …ஆஅ..ஆஅ..ஹா…
ஆண் : வாழ்க நளராஜனே வானவர் அதிபன்யாம்
வருணன் அக்கினி எமன் இவர்களன்றோ
ஆண் : தன்யனானேன் அமரர் ஆக்ஞை எதுவானாலும்
கண்யமுடன் ஏற்றுப் பணியாற்றுவேனே
ஆண் : தேவர்கள் நால்வரில் எழில் மேவும் ஒருவரை
தமயந்தி மாலையிட புகல வேண்டும்
ஆண் : சுரராஜன் மொழிப் போல தவறாமல் செல்லவே
சுந்தரியின் அந்தப்புரம் எளிதல்லவே
ஆண் : தேவர்கள் தூதனாய் செல்லும்போது
திடமின்றி உடல் குன்றும் சந்தேகமேன்
சிரம் மீதில் இதைக் கொண்டு சென்றிடில்
உருவமே மறைவாகும்
மயங்காதே விரைந்தேகுவாய்
ஹா…ஆஅ…ஹா…ஹா…ஆஆஆ
பெண் : அந்தப்புரம் நாடி அனுமதி இல்லாமல்
அஞ்சாமல் வந்ததாரோ…ஹா ..ஆஅ
அந்தப்புரம் நாடி அனுமதி இல்லாமல்
அஞ்சாமல் வந்ததாரோ
ஆண் : அமரேந்திரன் அக்கினியும்
எமராஜன் வருணரும்
அனுப்பிய தூதனாம் நளராஜனே
அவர்களில் ஒருவரை அன்புடன் அழகியே
வரனாகப் பெறவேண்டுமாம்
பெண்ணே வரனாகப் பெற வேண்டுமாம்
பெண் : அன்னத்தின் தூதாலே
உம்மை நினைத்த நான்
அகிலமே பிரண்டாலும் மாறுவேனோ
ஆண் : அன்புடனே என்னை மணந்தாலும் மகிழ்ந்தாலும்
அமரர்கள் அல்லலும் நேர்ந்திடாதோ
பெண் : அல்லலைச் சுகமா உள்ளமே கனிவோடு
அன்புடனே ஏற்றுக் கொண்டு நானே
உமக்கே ஆவலுடன் மாலை சூட்டுவேனே..மாலை சூட்டுவேனே
பெண் : எத்தனை ஜென்மங்கள் அடியேன் எடுத்தாலும்
என் கணவன் நளனுமன்றோ
இன்னும் இவ்வேழையின் இதயம் துடிக்கவே
சோதனை செய்வதும் அநீதியன்றோ
பெண் : சத்தியம் நிலைக்கவே இத்தரை மதிக்கவே
சதி பதிகளாய் வாழவே
தருணமே உருமாரி கணவரை தரிசிக்க
கருணையே புரிய வேண்டும்……..!
ஹா …ஆஅ…ஆ…..
ஹா …ஆ ஹா …


