Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Kalidasan

Male : ……………

Male : Aadi paadum azhagaana en thangai maanukku
Endrum kaaval naanthaanae en chella kannukku
Aadi paadum azhagaana en thangai maanukku
Endrum kaaval naanthaanae en chella kannukku

Male : Enthan kannil oli nee endru
Unarnthu kollammaa
Mannil uyirum neeyammaa

Male : Thaayai polae thottil katti
Thaalaattu sollvaen
Naalum unthan vaazhvil
Ingae nadhiyaaga oduvaen

Male : Aadi paadum azhagaana en thangai maanukku
Endrum kaaval naanthaanae en chella kannukku

Male : Kalyaana ezhil medai nee kaanavae
Intha kannodu kanavondru naan kaangiraen
Thaayaaga nee maarum thirunaalilae
Intha thangaikku seer thanthu paaraattuvaen

Male : Aasaigalo isai paadumae
Aasaigalo isai paadumae
Azhiyaatha un vaazhkkai kalaikaaviyam
Ezhil oviyam

Male : Aadi paadum azhagaana en thangai maanukku
Endrum kaaval naanthaanae en chella kannukku

Male : Needhaanae naan kanda thiru sannathi
Annan neeyindri enakkedhu mana nimmathi
Un anbu vattraatha thalaikkaaviri
Endrum unaipola oru sontham varumo ini

Female : Maru jenmangal unmai endraal
Maru jenmangal unmai endraal
Un thangai naanaga varavendum
Varam vendumae

Male : Aadi paadum azhagaana en thangai maanukku
Endrum kaaval naanthaanae en chella kannukku

Male : Enthan kannil oli nee endru
Unarnthu kollammaa
Mannil uyirum neeyammaa

Male : Thaayai polae thottil katti
Thaalaattu sollvaen
Naalum unthan vaazhvil
Ingae nadhiyaaga oduvaen

Male : Aadi paadum aariraariro…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : …………….

ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு
ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு

ஆண் : எந்தன் கண்ணில் ஒளி நீ என்று
உணர்ந்து கொள்ளம்மா
மண்ணில் உயிரும் நீயம்மா

ஆண் : தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்வேன்
நாளும் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன்

ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு

ஆண் : கல்யாண எழில் மேடை நீ காணவே
இந்த கண்ணோடு கனவொன்று நான் காண்கிறேன்
தாயாக நீ மாறும் திருநாளிலே
இந்த தங்கைக்கு சீர் தந்து பாராட்டுவேன்

ஆண் : ஆசைகளோ இசை பாடுமே
ஆசைகளோ இசை பாடுமே
அழியாத உன் வாழ்க்கை கலைக்காவியம்
எழில் ஓவியம்

ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு

பெண் : நீதானே நான் கண்ட திருச்சன்னதி
அண்ணன் நீயின்றி எனக்கேது மன நிம்மதி
உன் அன்பு வற்றாத தலைக்காவிரி
என்றும் உனைப்போல ஒரு சொந்தம் வருமோ இனி

பெண் : மறு ஜென்மங்கள் உண்மை என்றால்
மறு ஜென்மங்கள் உண்மை என்றால்
உன் தங்கை நானாக வரவேண்டுமே
வரம் வேண்டுமே

ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு

ஆண் : எந்தன் கண்ணில் ஒளி நீ என்று
உணர்ந்து கொள்ளம்மா
மண்ணில் உயிரும் நீயம்மா

ஆண் : தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்வேன்
நாளும் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன்

ஆண் : ஆடி பாடும் ஆரிராரிரோ…………

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here