Singer : Vani Jairam

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Aanantham tharum ragangal
Avalathu veenaiyin gaanangal
Kaalam kadantha niyaayangal
Kaninthu pirantha nerangal

Female : Aanantham tharum ragangal
Avalathu veenaiyin gaanangal
Kaalam kadantha niyaayangal
Kaninthu pirantha nerangal

Male : ……………..

Male : Kalyaana melangal irumurai kettaval
Ponnaana meanikku shanthiyindru
Ponnaana meanikku shanthiyindru
Kalyaana melangal irumurai kettaval
Ponnaana meanikku shanthiyindru
Ponnaana meanikku shanthiyindru

Male : Kaanaatha kanavugal palamurai kandaval
Idhu kannaara kaangindra kaatchiyithu
Idhu kannaara kaangindra kaatchiyithu

Female : Aanantham tharum ragangal
Avalathu veenaiyin gaanangal
Kaalam kadantha niyaayangal
Kaninthu pirantha nerangal

Male : ………………….

Female : Thaanendru ninaippathaiththaan seithu mudippaal
Nyaalaththil piranthaal geedhaiyilae
Santhosham enbathuthaan thaedikandaal
Thallaadugindraal aasaiyilae…

Male : ……………….

Female : Naamae ninaithu naamae magizhvathai
Naattinil solvaar mathiyendru
Naayagan ninaiththu naayagan mudippathai
Nallorgal sonnaar vithiyendru

Female : Aanantham ennaum azhagiya yaettil
Avargal ezhuthiya kavithai ondru
Avargal ezhuthiya kavithaiyai padiththu
Aandavan seitha thiruthamondru
Aandavan seitha thiruthamondru

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆனந்தம் தரும் ராகங்கள்
அவளது வீணையின் கானங்கள்
காலம் கடந்த நியாயங்கள்
கனிந்து பிறந்த நேரங்கள்

பெண் : ஆனந்தம் தரும் ராகங்கள்
அவளது வீணையின் கானங்கள்
காலம் கடந்த நியாயங்கள்
கனிந்து பிறந்த நேரங்கள்

ஆண் : ……………………..

ஆண் : கல்யாண மேளங்கள் இருமுறை கேட்டவள்
பொன்னான மேனிக்கு சாந்தியின்று
பொன்னான மேனிக்கு சாந்தியின்று
கல்யாண மேளங்கள் இருமுறை கேட்டவள்
பொன்னான மேனிக்கு சாந்தியின்று
பொன்னான மேனிக்கு சாந்தியின்று

ஆண் : காணாத கனவுகள் பலமுறை கண்டவள்
இது கண்ணாற காண்கின்ற காட்சியிது
இது கண்ணாற காண்கின்ற காட்சியிது

பெண் : ஆனந்தம் தரும் ராகங்கள்
அவளது வீணையின் கானங்கள்
காலம் கடந்த நியாயங்கள்
கனிந்து பிறந்த நேரங்கள்

ஆண் : ……………………..

பெண் : தானொன்று நினைப்பதைத்தான் செய்து முடிப்பாள்
ஞாலத்தில் பிறந்தவள் கீதையிலே
சந்தோசம் என்பதுதான் தேடிக்கண்டாள்
தள்ளாடுகின்றாள் ஆசையிலே………

ஆண் : ……………………..

பெண் : காலத்தின் வேகம் புரிந்தது – அவள்
காதலின் வேகம் அதிகரிக்க
காதலின் வேகம் அதிகரிக்க
காவிய நாயகன் பறப்பதென்ன
தன் காதல் நாயகியை அணைத்திருக்க…….
காதல் நாயகியை அணைத்திருக்க…….

ஆண் : ……………………..

பெண் : நாமே நினைத்து நாமே மகிழ்வதை
நாட்டினில் சொல்வார் மதியென்று
நாயகன் நினைத்து நாயகன் முடிப்பதை
நல்லோர்கள் சொன்னார் விதியென்று

பெண் : ஆனந்தம் என்னும் அழகிய ஏட்டில்
அவர்கள் எழுதிய கவிதை ஒன்று
அவர்கள் எழுதிய கவிதையைப் படித்து
ஆண்டவன் செய்த திருத்தமொன்று………
ஆண்டவன் செய்த திருத்தமொன்று………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here