Singer : K. J. Yesudas
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
Male : Aanandham aanadhu arpudham aanadhu
Naan andha marundhai kandu konden
Aanandham aanadhu arpudham aanadhu
Naan andha marundhai kandu konden
Andha gnyaalathilae ennai arindhu konden
Nidhaanathilae unmai purindhu konden
Andha gnyaalathilae ennai arindhu konden
Nidhaanathilae unmai purindhu konden
Male : Aanandham aanadhu arpudham aanadhu
Naan andha marundhai kandu konden
Male : Ithanai siriya vidhaiyil irundhu
Ethanaiperiya maram vandhadhu
Ithanai siriya vidhaiyil irundhu
Ethanaiperiya maram vandhadhu
Athanai maramum ithanai kaalam
Adharkkul eppadi kudi kondathu
Male : Patham maadham pirappadhu enbathai
Parum porul yaarukkum ezhudhi veithaan
Ithanai naalil irappadhu enbathai
Ragasiyamaaga yen vaithaan
Ragasiyamaaga yen vaithaan
Male : Aanandham aanadhu arpudham aanadhu
Naan andha marundhai kandu konden
Male : Maranathin naazhigai munbae therindhaal
Manidhan iraivanai ninaippaana
Maranathin naazhigai munbae therindhaal
Manidhan iraivanai ninaippaana
Madhamum vedhamum illaathirundhaal
Iraivanin ragasiyam arivaana
Male : Udal ennum koodu veezhvadhan munnae
Avanudan koodudhal aanandham
Uyir enum kaattru odidum munnae
Thathuva kaattrae perinbam
Thathuva kaattrae perinbam
Male : Aanandham aanadhu arpudham aanadhu
Naan andha marundhai kandu konden
Andha gnyaalathilae ennai arindhu konden
Nidhaanathilae unmai purindhu konden
Male : Nambikkaiyudane iraivanai thedu
Naalaiya poludhae avan varuvaan
Nanmai theemaiyil avanai naadu
Nanmai mattum avan tharuvaan….
Nanmai mattum avan tharuvaan….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஆனந்தமானது அற்புதமானது
நான் அந்த மருந்தைக் கண்டு கொண்டேன்
ஆனந்தமானது அற்புதமானது
நான் அந்த மருந்தைக் கண்டு கொண்டேன்
அந்த ஞாலத்திலே என்னை அறிந்து கொண்டேன்
நிதானத்திலே உண்மை புரிந்து கொண்டேன்
அந்த ஞாலத்திலே என்னை அறிந்து கொண்டேன்
நிதானத்திலே உண்மை புரிந்து கொண்டேன்
ஆண் : ஆனந்தமானது அற்புதமானது
நான் அந்த மருந்தைக் கண்டு கொண்டேன்
ஆண் : இத்தனை சிறிய விதையிலிருந்து
எத்தனை பெரிய மரம் வந்தது
இத்தனை சிறிய விதையிலிருந்து
எத்தனை பெரிய மரம் வந்தது
அத்தனை மரமும் இத்தனை காலம்
அதற்குள் எப்படி குடி கொண்டது
ஆண் : பத்தாம் மாதம் பிறப்பது என்பதை
பரம்பொருள் யாருக்கும் எழுதி வைத்தான்
இத்தனை நாளில் இறப்பது என்பதை
ரகசியமாக ஏன் வைத்தான்….
ரகசியமாக ஏன் வைத்தான்….
ஆண் : ஆனந்தமானது அற்புதமானது
நான் அந்த மருந்தைக் கண்டு கொண்டேன்
ஆண் : மரணத்தின் நாழிகை முன்பே தெரிந்தால்
மனிதன் இறைவனை நினைப்பானா
மரணத்தின் நாழிகை முன்பே தெரிந்தால்
மனிதன் இறைவனை நினைப்பானா
மதமும் வேதமும் இல்லாதிருந்தால்
இறைவனின் ரகசியம் அறிவானா
ஆண் : உடலென்னும் கூடு வீழ்வதன் முன்னே
அவனுடன் கூடுதல் ஆனந்தம்
உயிர் எனும் காற்று ஓடிடும் முன்னே
தத்துவக் காற்றே பேரின்பம்…..
தத்துவக் காற்றே பேரின்பம்…..
ஆண் : ஆனந்தமானது அற்புதமானது
நான் அந்த மருந்தைக் கண்டு கொண்டேன்
அந்த ஞாலத்திலே என்னை அறிந்து கொண்டேன்
நிதானத்திலே உண்மை புரிந்து கொண்டேன்
ஆண் : நம்பிக்கையுடனே இறைவனைத் தேடு
நாளைய பொழுதே அவன் வருவான்
நன்மை தீமையில் அவனை நாடு
நன்மை மட்டும் அவன் தருவான்….
நன்மை மட்டும் அவன் தருவான்….
