Singer : T. M. Soundarajan

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Male : Thulli varum meengalae
Sollum mozhi kaettpeerae
Ullam ulla maanidarkku
Ungal arivaedhum illai

Male : Thulli varum meengalae
Sollum mozhi kaettpeerae
Ullam ulla maanidarkku
Ungal arivaedhum illai

Male : Kalla millaa ungalukku
Karthar thunaiyaaga vandhaar
Kadal ennum veedu katti
Kaavalukku avndhu nindraar…….

Male : Udambukku kattupattu
Ullae oru aavi iruppadhu pol
Sathiyathukku kattu pattu
Indha boomi irukkiradhu
Kartharae adhan thalaivar
Kartharae adhan thalaivar
Kartharae adhan thalaivar

Male : Kartharadhu raajasabai
Kattravarukku deva sabai
Kaalamenum oozhiyilum
Kalangaadha needhi sabai
Chinnanjiru meemgalukkum
Annal vandhu oottugiraar
Aar arivil oor arivu ariyaadha aazhamadhu

Male : Uyir padaitha
Jeevaraasigal anaithirkkum
Avarae moolam
Ungalukku puriyum naan solvadhu
Ungalukku puriyum naan solvadhu

Male : Aagaayam boomiyenum
Andangalai yaar padaithaar
Saagaadha perunkadalai
Samaithu veitha devan evan
Megam ena mazhai pozhiyum
Meiyaana sakthi adhu
Mel ulagam keezh ulagam
Vananga varum meippavan avan

Male : Vaanam idi pada vaiyam podipada
Oozhi puyal ena aadum
Kadal alai ponga vendum
Gyaana kumaranin kola thirumugam
Kaanum magizhvinil
Meengal palavagai thulla vendum

Male : Gaanam yaavilum devan thirumurai
Kaatum padhaiyai naattin maanidar
solla vendum
Vaadham seidhidum paedhai pillaigal
Boomikkuriyavan yesunadharai
Enna vendum enna vendum enna vendum

Male : Vanna vanna meengal ellam
Vaai thirndhu pesaadhoo
Varungal meen inam thaan
Vattamittu koodungal

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : துள்ளி வரும் மீன்களே…
சொல்லும் மொழி கேட்பீரே
உள்ளம் உள்ள மானிடர்க்கு
உங்கள் அறிவேதுமில்லை

ஆண் : துள்ளி வரும் மீன்களே…
சொல்லும் மொழி கேட்பீரே
உள்ளம் உள்ள மானிடர்க்கு
உங்கள் அறிவேதுமில்லை

ஆண் : கள்ளமில்லா உங்களுக்கு
கர்த்தர் துணையாக வந்தார்
கடலென்னும் வீடு கட்டி
காவலுக்கு வந்து நின்றார்…….

ஆண் : உடம்புக்குக் கட்டுப்பட்டு
உள்ளே ஒரு ஆவி இருப்பதுபோல்
சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு
இந்த பூமி இருக்கிறது..
கர்த்தரே அதன் தலைவர்
கர்த்தரே அதன் தலைவர்
கர்த்தரே அதன் தலைவர்……

ஆண் : கர்த்தரது ராஜசபை
கற்றவர்க்கு தேவசபை
காலமெனும் ஊழியிலும்
கலங்காத நீதி சபை
சின்னஞ் சிறு மீன்களுக்கும்
அன்னல் வந்து ஊட்டுகிறார்
ஆறறிவில் ஓரறிவு அறியாத ஆழமது..

ஆண் : உயிர் படைத்த
ஜீவராசிகள் அனைத்திற்கும்
அவரே மூலம்
உங்களுக்குப் புரியும் நான் சொல்வது
உங்களுக்குப் புரியும் நான் சொல்வது..

ஆண் : ஆகாயம் பூமியெனும்
அண்டங்களை யார் படைத்தார்
சாகாத பெருங்கடலை
சமைத்து வைத்த தேவன் எவன்
மேகமென மழை பொழியும்
மெய்யான சக்தி அது
மேலுலகம் கீழுலகம்
வணங்க வரும் மேய்ப்பனவன்…..

ஆண் : வானம் இடிபட வையம் பொடிபட
ஊழிப் புயலென ஆடும்
கடலலை பொங்க வேண்டும்..
ஞானக் குமரனின் கோலத் திருமுகம்
காணும் மகிழ்வினில்
மீன்கள் பலவகை துள்ள வேண்டும்..

ஆண் : கானம் யாவிலும் தேவன் திருமறை
காட்டும் பாதையை நாட்டின் மானிடர்
சொல்ல வேண்டும்……
வாதம் செய்திடும் பேதை பிள்ளைகள்
பூமிக்குரியவன் ஏசுநாதரை
எண்ண வேண்டும் எண்ண வேண்டும்
எண்ண வேண்டும்

ஆண் : வண்ண வண்ண மீன்களெல்லாம்
வாய் திறந்து பேசாதோ
வாருங்கள் மீன் இனம் தான்
வட்டமிட்டு கூடுங்கள்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here