Singer : S. P. Balasubrahmanyam
Music Director : Deva
Lyricist : Vaali
Humming : ………………..
Aasai vecha annakiliye
Unna maalaiyida kaathirundhen
Music : ……………..
Maalai onnu vaangi vara
Naanum poo kadaikku poyirundhen
Maaliyum kaiyumaaga
Naanum avndha naalinilae
Maamara pacha kili
Ver oruthan tholinilae
Kanneer vittu ninnen naerinilae
Kaalam venneera vittadhenna verinilae
Humming : ………………….
Music : ……………….
Kili pechu kettu kettu
Kirakkam thaan yeri ponen
Natpukku kaadhal artham
Karpitha muttaal aanen
Kaaveri thaneer endru
Kaanala naan nenachen
Kaanlil thoondiyathaan
Pottu naan meen pudichen
Thappaaga kanakku pottu
Ippa thaan kann mulichen raasathi…
Music : ………………
Ennaasa rathiname
Un kaaval naan iruppen
Engae nee vaazhndha enna
Nee vaazha paateduppen
Pottodum poovodum nee
Pallaandu vaazha vendum
Oru kodi inbam endrum
Unaithaan soozha venum
Nalla nee irundha podhum
Enakkingae enna venum raasathi
Aasai vecha annakiliye
Unna maalaiyida kaathirundhen
Maaliyum kaiyumaaga
Naanum avndha naalinilae
Maamara pacha kili
Ver oruthan tholinilae
Kanneer vittu ninnen naerinilae
Kaalam venneera vittadhenna verinilae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : வாலி
முனங்கல் : ....................
ஆண் : ஆசை வெச்ச அன்னக்கிளியே
உன்ன மாலையிட காத்திருந்தேன்
இசை : .................
ஆண் : மாலை ஒண்ணு வாங்கி வர
நானும் பூக்கடைக்கு போயிருந்தேன்
ஆண் : மாலையும் கையுமாக
நானும் வந்த நாளினிலே
மாமர பச்சக்கிளி
வேறொருத்தன் தோளினிலே
கண்ணீர விட்டு நின்னேன் நேரினிலே
காலம் வெந்நீர விட்டதென்ன வேரினிலே
முனங்கல் : ......................
இசை : ...................
ஆண் : கிளிப் பேச்சுக் கேட்டுக் கேட்டு
கிறக்கம் தான் ஏறிப் போனேன்
நட்புக்கு காதல் அர்த்தம்
கற்பித்த முட்டாள் ஆனேன்
ஆண் : காவேரி தண்ணீர் என்று
கானல நான் நெனச்சேன்
கானலில் தூண்டியத்தான்
போட்டு நான் மீன் புடிச்சேன்
ஆண் : தப்பாக கணக்குப் போட்டு
இப்பத்தான் கண் முழிச்சேன் ராசாத்தி...
இசை : ..................
ஆண் : என்னாச ரத்தினமே
உன் காவல் நான் இருப்பேன்
எங்கே நீ வாழ்ந்தா என்ன
நீ வாழ பாட்டெடுப்பேன்
ஆண் : பொட்டோடும் பூவோடும் நீ
பல்லாண்டு வாழ வேண்டும்
ஒரு கோடி இன்பம் என்றும்
உனைத்தான் சூழ வேணும்
ஆண் : நல்லா நீ இருந்தாப் போதும்
எனக்கிங்கே என்ன வேணும் ராசாத்தி
ஆண் : ஆசை வெச்ச அன்னக்கிளியே
உன்ன மாலையிட காத்திருந்தேன்
ஆண் : மாலையும் கையுமாக
நானும் வந்த நாளினிலே
மாமர பச்சைக்கிளி
வேறொருத்தன் தோளினிலே
கண்ணீர விட்டு நின்னேன் நேரினிலே
காலம் வெந்நீர விட்டதென்ன வேரினிலே