Amma Badhil Song Lyrics is the track from Porantha Veeda Puguntha Veeda Tamil Film – 1993, Starring Sivakumar, Goundamani, Senthil, Charlie, Krishna Rao, Bhanupriya, Vadivukkarasi, Kovai Sarala, C. K. Saraswathi and K.S. Jayalakshmi. This song was sung by S. Janaki. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.

Singer : S. Janaki

Music Director : Ilayaraja

Lyricist : Vaali

Female : Amma badhil solladi ingae edhir nilladi
Amma badhil solladi ingae edhir nilladi
Theeraadha thuyar konda penn jenmama
Penn endru pirandhaale perum paavama
Amma badhil solladi ingae edhir nilladi

Female : Vaasanai panneeril nithamae neeraadi
Velaikkoru alangaaram kaanbathenna
Vedhanai kanneeril ennai nee neeratti
Dhooram nindru vaai moodi paarpadhenna

Female : Thiruvadiyil saranam saranam
Ena thudhi puriyum pozhuthu
Alai alaiyaa thuyaram peruga
Ena vadhaippadho azhagu
Vidhi vinaiyaa unai kaetten thaaye

Female : Amma badhil solladi ingae edhir nilladi
Theeraadha thuyar konda penn jenmama
Penn endru pirandhaale perum paavama
Amma badhil solladi ingae edhir nilladi

Female : Deviyae nee kooda thakshanin magalaaga
Maalaiyitta sivanodu vaazhnthirundhaai
Thaayena unai kaatha
Thanhaiyin mania thaedi
Naayagan sol kaelaamal odi vandhaai

Female : Puguntha idam nalamum valamum pera
Anudhinamum uzhaitahen
Pirantha idam thavikkum tharunam
Konda udan pirappai anaitahen
Sariyo thavaro unai kaetten thaaye

Female : Amma badhil solladi ingae edhir nilladi
Theeraadha thuyar konda penn jenmama
Penn endru pirandhaale perum paavama
Amma badhil solladi ingae edhir nilladi

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா
பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி…

பெண் : வாசனை பன்னீரில் நித்தமே நீராடி
வேளைக்கொரு அலங்காரம் காண்பதென்ன
வேதனை கண்ணீரில் என்னை நீ நீராட்டி
தூரம் நின்று வாய் மூடி பார்ப்பதென்ன

பெண் : திருவடியில் சரணம் சரணம்
என துதி புரியும் பொழுது
அலை அலையா துயரம் பெருக
என வதைப்பதுவோ அழகு
விதியா வினையா உனைக் கேட்டேன் தாயே

பெண் : அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா
பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி

பெண் : தேவியே நீ கூட தக்ஷனின் மகளாக
மாலையிட்ட சிவனோடு வாழ்ந்திருந்தாய்
தாயென உனைக் காத்த
தந்தையின் மனைத் தேடி
நாயகன் சொல் கேளாமல் ஓடி வந்தாய்

பெண் : புகுந்த இடம் நலமும் வளமும் பெற
அனுதினமும் உழைத்தேன்
பிறந்த இடம் தவிக்கும் தருணம்
கொண்ட உடன் பிறப்பை அணைத்தேன்
சரியோ தவறோ உனைக் கேட்டேன் தாயே

பெண் : அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா
பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here