Singer : K. B. Sundarambal
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Kannadasan
Kodalaar koodumoru kumarimunai orathil
Kudikonda thangamayilae
Kottravan thenpaandi muthukalaal aadum oru
Kumarikku undhan peyarae
Kumarikku undhan peyarae
Aathvan udhayamum asthamana samayamum
Amaikkindra kadalin arugae
Azhagaana thamizh ulagam vazhikaana vandhadhoru
Anbaana kumari malarae
Nadaatha pergalum naaduvaar paaduvaar
Naadunandhan kannilamma
Nangai nee vadadhisai thirumbhinaal imayathil
Naayagan uruvamamma
Kothaiyin mookuthi kulir kadalil varugindra
Padagaiyum kaakum amma
Kodaana kodi uyir koottangal koodi unnai
Kumbittu vaazhthum amma
Kumbittu vaazhthum amma
Kumbittu vaazhthum amma
பாடகி : கே. பி. சுந்தராம்பாள்
இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : கூடலார் கூடுமொரு குமரிமுனை ஓரத்தில்
குடிகொண்ட தங்க மயிலே
கொற்றவன் தென்பாண்டி முத்துக்களாடுமொரு
குமரிக்கு உந்தன் பெயரே
குமரிக்கு உந்தன் பெயரே
பெண் : ஆதவன் உதயமும் அஸ்தமன சமயமும்
அமைகின்ற கடலினருகே
அழகான தமிழகமும் வழிகாண வந்ததொரு
அன்பான குமரி மலரே
பெண் : நாடாத பேர்களும் நாடுவார் பாடுவார்
நாடுந்தன் கண்ணிலம்மா
நங்கை நீ வடதிசை திரும்பினால் இமயத்தில்
நாயகன் உருவமம்மா
பெண் : கோதையின் மூக்குத்தி குளிர் கடலில் வருகின்ற
படகையும் காக்குமம்மா
கோடானு கோடி உயிர் கூட்டங்கள் கூடி உன்னைக்
கும்பிட்டு வாழ்த்துமம்மா......
கும்பிட்டு வாழ்த்துமம்மா......
கும்பிட்டு வாழ்த்துமம்மா......