Namo Narasimha Naadha Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by Balamuralikrishna, P. Susheela and Chorus and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thiruchi Thiyagarajan.
Singers : Balamuralikrishna, P. Susheela and Chorus
Music Director : S. Rajeswara Rao
Lyricist : Thiruchi Thiyagarajan
பாடகர்கள் : பாலமுரளி கிருஷ்ணா, பி. சுஷீலா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : திருச்சி தியாகராஜன்
பெண் : ஏ மாதவா முகுந்தா
பாபசம்ஹாரா
திரிலோக ஜகன்மோகனா காரா
மாயவதாரா ஜகன்நாதா
லோகாதிநாதா
பெண் : மச்சாவதாரத்திலே சோமனைக் கொன்று
வேதங்கள் காத்தனை!
தேவாசுரர் அன்று பாற் கடல் கடைகின்ற காலத்தில்
கூர்மாவதாரம் கொண்டு மந்திரமலை தாங்கி
ஜகன்மோகினியாக உருமாறி
வானமுதை தேவர்க்கு ஊட்டினை!
வராக ரூபம் கொண்டே சிறைப்பட்ட
பூதேவியை மீட்டனை!
பெண் : அண்டத்தில் அண்டமொடு அணுவுக்குள் அணுவான ஜகதீசனே!
இன்று உன் மகிமை அறியாத அஞ்ஞானிக் கண் தந்து
மெய்யான அமுதூட்டி அடியாரின் குறை தீர்க்க
நரசிங்க அவதாரமாய்
இங்கே அமைய ஆட் கொள்ளவே நீ வந்தாயோ தேவா!
பரந்தாமா ! வைகுண்ட வாசா! வைகுண்ட வாசா!
பெண் : நமோ நரசிம்மா நமோ பக்தபாலா
அனைவரும் : நமோ நரசிம்மா நமோ பக்தபாலா
பெண் : விண்ணும் மண்ணுமே வியந்து அஞ்சிடும்
உக்கிர ரூபமே உடனே மாற்றுவாய்!
அனைவரும் : விண்ணும் மண்ணுமே வியந்து அஞ்சிடும்
உக்கிர ரூபமே உடனே மாற்றுவாய்!
பெண் : கருணையான அருள் மழை பொழிந்திடும்
வடிவமாக நீ வந்தே தோன்றுவாய்!
அனைவரும் : நமோ நரசிம்மா நமோ பக்தபாலா
நமோ நரசிம்மா நமோ பக்தபாலா
நமோ நரசிம்மா நமோ பக்தபாலா