Singer : S. Janaki
Music by : T. R. Pappa
Lyrics by : Ramalinga Adigalar
Neerundu pozhigindra kaarundu
Neerundu pozhigindra kaarundu
Viilaigindra nilanundu palanumundu
Nithiyundu thuthiyundu mathiyundu kathikonda
Neriyundu nilaiyumundu
Neerundu pozhigindra kaarundu
Oorundu perundu maniyundu paniyundu
Udaiyundu kodaiyumundu
Undundu magizhavaeyunavundu
Saanthamurum ulamundu valamumundu
Neerundu pozhigindra kaarundu
Viilaigindra nilanundu palanumundu
Thaerundu kariyundu pariyundu
Mattrulla selvangal yaavumundu
Thaerundu kariyundu pariyundu
Mattrulla selvangal yaavumundu
Thaenundu vanduru kadampaniyum
Ninpathath thiyaana mundaainarasae
Thaarunda chennaiyir
Kanatha kottaththulvalar
Thalamongu kantha vaelae
Thanmugath thuiyamani yunmuga saivamani
Shanmuga deiva maniyae…..
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார்
பெண் : நீருண்டு பொழிகின்ற காருண்டு
நீருண்டு பொழிகின்ற காருண்டு
விளைகின்ற நிலனுண்டு பலனுமுண்டு
நிதியுண்டு துதியுண்டு மதியுண்டு கதிகொண்ட
நெறியுண்டு நிலையு முண்டு
பெண் : நீருண்டு பொழிகின்ற காருண்டு
பெண் : ஊருண்டு பேருண்டு மணியுண்டு பணியுண்டு
உடையுண்டு கொடையு முண்டு
உண்டுண்டு மகிழவே யுணவுண்டு
சாந்தமுறும் உளமுண்டு வளமு முண்டு.....
பெண் : நீருண்டு பொழிகின்ற காருண்டு
விளைகின்ற நிலனுண்டு பலனுமுண்டு
பெண் : தேருண்டு கரியுண்டு பரியுண்டு
மற்றுள்ள செல்வங்கள் யாவுமுண்டு
தேருண்டு கரியுண்டு பரியுண்டு
மற்றுள்ள செல்வங்கள் யாவுமுண்டு
தேனுண்டு வண்டுறு கடம்பணியும்
நின்பதத் தியான முண்டாயி னரசே.....
பெண் : தாருண்ட சென்னையிற்
கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.......