Singer : S. Janaki
Music by : T. R. Pappa
Lyrics by : Ramalinga Adigalar
Thiruvongu punniya seyalongi
Anbarul thiralongu selvamonga
Serivonga arivongi
Niraivaana inbam thigazhnthonga
Arul koduththu maruvongu
Sengamala malarongu…
Vanamonga valar karunai mayamongi
Orr varamongu thellamutha vayamongi
Anantha vadivaagi yongi
Nyaana uruvongum unarvinirai yoliyongi
Oongu mayil oornthongi
Evvuyirukkum uravongu
Ninpathamennulamongi
Valamonga uikindra naalenthanaal
Tharuvuvongu chennaiyir kanthakottaththul valar
Thalamongu kantha vaelae
Thanmugath thuyyamani unmuga saivamani
Shanmuga dheivamaniyae…..
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார்
பெண் : திருவோங்கு புண்ணியச் செயலோங்கி
அன்பருள் திறலோங்கு செல்வ மோங்கச்
செறிவோங்க அறிவோங்கி
நிறைவான இன்பம் திகழ்ந் தோங்க
அருள் கொடுத்து மருவோங்கு
செங்கமல மலரோங்கு.....
பெண் : வணமோங்க வளர் கருணை மயமோங்கி
ஓர் வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி
ஆனந்த வடிவாகி யோங்கி
ஞான உருவோங்கும் உணர்வினிறை யொளியோங்கி
பெண் : ஓங்கு மயில் ஊர்ந்தோங்கி
எவ்வுயிர்க்கும் உறவோங்கு
நின்பதமென்னுளமோங்கி
வளமோங்க உய்கின்ற நாளெந்த நாள்
பெண் : தருவோங்கு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே......