Singers : K. S. Chitra and Mano
Music by : Ilayaraja
Lyricist : Vaali
Aa….aa….aa….aa….aaa….aa….
Aa…..aa…..aa….aa….aa…aa…aahaa…haa….aa…
Orr poomaalai adhil thaen ivvelai
Female : Mannan maarbil thvazhnthidum pothu
Ennai naanae ninaippathu yaedhu
Male : Intha vaanam bhoomi yaavum mayangida
Orr poomaalai adhil thaen ivvelai….
Vizhiyil oru kavithai naadagam
Varaiyum intha azhagu moganam
Ninaivil intha thalaivan nyapagam
Nilavugindra paruvam vaalipam
Pani vizhum
Female : Iravugal
Male : Palapala
Female : Kanavugal
Thotta idam yaavum sarkkaraiyum paalum
Kondu varum thaegam ennai vanthu koodum
Thotta idam yaavum sarkkaraiyum paalum
Kondu varum thaegam ennai vanthu koodum
Ini aadhi antham engum
Male : Pudhu aasai vellam paayum uravithu
Orr poomaalai adhil thaen ivvelai….
……………….
Malaiyil vizhum aruvi polavae
Manathil ezhum kadhaigal kodiyae
Unakkum varum unarchchi polavae
Enakkum varum iniya thozhiyae
Mudhal mudhal
Male : Thoduvathu
Female : Dhinam dhinam
Male : Valarvathu
Muththiraigal poda niththiraiyum odum
Sittridaiyum aada chiththiramum vaadum
Muththiraigal poda niththiraiyum odum
Sittridaiyum aada chiththiramum vaadum
Sugam paathi paathi aagum
Female : Oru bodhai vanthu serum pozhuthithu
Orr poomaalai adhil thaen ivvelai
Male : Mannan maarbil thvazhnthidum pothu
Ennai naanae ninaippathu yaedhu
Female : Intha vaanam bhoomi yaavum mayangida
Orr poomaalai adhil thaen ivvelai….
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
பெண் : ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆஅ......ஆ....
அ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஹா....ஹா....ஆ.....
ஆண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை
பெண் : மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது
என்னை நானே நினைப்பது ஏது
ஆண் : இந்த வானம் பூமி யாவும் மயங்கிட
ஆண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை
பெண் : விழியில் ஒரு கவிதை நாடகம்
வரையும் இந்த அழகு மோகனம்
நினைவில் இந்த தலைவன் ஞாபகம்
நிலவுகின்ற பருவம் வாலிபம்
ஆண் : பனி விழும்...
பெண் : இரவுகள்......
ஆண் : பலப்பல...
பெண் : கனவுகள்
ஆண் : தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்
கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
தொட்ட இடம் யாவும் சர்க்கரையும் பாலும்
கொண்டு வரும் தேகம் என்னை வந்து கூடும்
பெண் : இனி ஆதி அந்தம் எங்கும்
ஆண் : புது ஆசை வெள்ளம் பாயும் உறவிது.....
ஆண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....
பெண் : ஆஹா.....ஆ....ஹா.....ஆ....ஆ.....
ஆஹா.....ஆ....ஹா.....ஆ....ஆ.....
ஆஹா.....ஆ...ஆ....ஆ.....ஆஹா....ஹா....ஆ....
ஆண் : மலையில் விழும் அருவி போலவே
மனதில் எழும் கதைகள் கோடியே
உனக்கும் வரும் உணர்ச்சி போலவே
எனக்கும் வரும் இனிய தோழியே
பெண் : முதல் முதல்
ஆண் : தொடுவது
பெண் : தினம் தினம்
ஆண் : வளர்வது
பெண் : முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்
சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும்
முத்திரைகள் போட நித்திரையும் ஓடும்
சிற்றிடையும் ஆட சித்திரமும் வாடும்
ஆண் : சுகம் பாதி பாதி ஆகும்
பெண் : ஒரு போதை வந்து சேரும் பொழுதிது...
பெண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....
ஆண் : மன்னன் மார்பில் தவழ்ந்திடும் போது
என்னை நானே நினைப்பது ஏது
பெண் : இந்த வானம் பூமி யாவும் மயங்கிட
ஆண் : ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.....