Sattangal Veru Song Lyrics is the track from Pudhalvan Tamil Film – 1997, Starring Ramki, Pragathi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.
Singer : S. P. Balasubrahmanyam
Music Director : Deva
Lyricist : Vairamuthu
Sattangal veru dharmangal veru
Ini enna seiyya pogiraai
Un pillai paasam
Un nenjil modha
Oru pakkam enna saaigiraai
Oor vazhakkai aainhu
Theerppu sollakkoodum
Un vazhakkai aainthaal
Paasam kannai moodum
Vithiyo mathiyo edhu vellumo
Sattangal veru dharmangal veru
Ini enna seiyya pogiraai
Un pillai paasam
Un nenjil modha
Oru pakkam enna saaigiraai
Iru kannil ondru pazhuthaanathu
Maru kannai thedi vithi vanthathu
Sattapadi paarththaal sariyaanathu
Dharmapadi paarththaal manam noguthuthu
Intha varalaaru intha thagararu
Engum kidayaathadaa
Thoonga mudiyaamal thaanga mudiyaamal
Vaazhnthu payanethadaa
Kuttram seiyyaatha
Pettra veyirondu
Pattri erigindrathae
Sattangal veru dharmangal veru
Ini enna seiyya pogiraai
Un pillai paasam
Un nenjil modha
Oru pakkam enna saaigiraai
Manasaatchi ondre nilayaanathu
Vithi potta kodu azhiyaathathu
Intha kadhai yaarum kaanaathathu
Edhu mudivendru evar solvathu
Neethi mulendru
Pasam pirakendrum
Netru nee sonnathu
Neethi pirakendru
Paasam mudhalendrum
Indru nee kandathu
Uravai azha vaiththu
Uyirai kuri vaththu
Sattam thalaikkettrathu
Sattangal veru dharmangal veru
Ini enna seiyya pogiraai
Un pillai paasam
Un nenjil modha
Oru pakkam enna saaigiraai
Oor vazhakkai aainhu
Theerppu sollakkoodum
Un vazhakkai aainthaal
Paasam kannai moodum
Vithiyo mathiyo edhu vellumo
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : சட்டங்கள் வேறு தர்மங்கள் வேறு
இனி என்ன செய்ய போகிறாய்
உன் பிள்ளை பாசம்
உன் நெஞ்சில் மோத
ஒரு பக்கம் என்ன சாய்கிறாய்
ஆண் : ஊர் வழக்கை ஆய்ந்து
தீர்ப்பு சொல்லக் கூடும்
உன் வழக்கை ஆய்ந்தால்
பாசம் கண்ணை மூடும்
விதியோ மதியோ எது வெல்லுமோ
ஆண் : சட்டங்கள் வேறு தர்மங்கள் வேறு
இனி என்ன செய்ய போகிறாய்
உன் பிள்ளை பாசம்
உன் நெஞ்சில் மோத
ஒரு பக்கம் என்ன சாய்கிறாய்
ஆண் : இரு கண்ணில் ஒன்று பழுதானது
மறு கண்ணை தேடி விதி வந்தது
சட்டப்படி பார்த்தால் சரியானது
தர்மபடி பார்த்தால் மனம் நோகுது
ஆண் : இந்த வரலாறு இந்த தகராறு
எங்கும் கிடையாதடா
தூங்க முடியாமல் தாங்க முடியாமல்
வாழ்ந்து பயனேதடா
ஆண் : குற்றம் செய்யாத
பெற்ற வயிறொன்று
பற்றி எரிகின்றதே
ஆண் : சட்டங்கள் வேறு தர்மங்கள் வேறு
இனி என்ன செய்ய போகிறாய்
உன் பிள்ளை பாசம்
உன் நெஞ்சில் மோத
ஒரு பக்கம் என்ன சாய்கிறாய்
ஆண் : மனசாட்சி ஒன்றே நிலையானது
விதி போட்ட கோடு அழியாதது
இந்த கதை யாரும் காணாதது
எது முடிவென்று எவர் சொல்வது
ஆண் : நீதி முதலென்றும்
பாசம் பிறகென்றும்
நேற்று நீ சொன்னது
நீதி பிறகென்றும்
பாசம் முதலென்றும்
இன்று நீ கண்டது
ஆண் : உறவை அழ வைத்து
உயிரை குறி வைத்து
சட்டம் தலைக்கேற்றது
ஆண் : சட்டங்கள் வேறு தர்மங்கள் வேறு
இனி என்ன செய்ய போகிறாய்
உன் பிள்ளை பாசம்
உன் நெஞ்சில் மோத
ஒரு பக்கம் என்ன சாய்கிறாய்
ஆண் : ஊர் வழக்கை ஆய்ந்து
தீர்ப்பு சொல்லக் கூடும்
உன் வழக்கை ஆய்ந்தால்
பாசம் கண்ணை மூடும்
விதியோ மதியோ எது வெல்லுமோ