Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu
Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu

Male : Vaazh naalellaam valamaanathu
Ivar vaazhvuththaan vaazhvenbathu

Male : Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu

Female : Deepaththil ondru karpooram ondru
Erigindrathingae ondraaga nindru
Ellaamum koyil ellaamum deepam
Erigindra deepam silar kanda laabam
Eriyaatha deepam silar seitha paavam

Female : Naayagan naayagi paavam kaanbathu
Kovilil kaangindra kaatchi
Naan athai kandaen
Verethai solvaen
Thadugindrathae mana saatchi

Male : Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu

Male : Veettukku veedu thaagangal undu
Vaazhgindra vaazhvil raagangal undu
Aanantha raagam paadungal indru
Aayiram kaalam vaazhungal endru
Aayiram kaalam vaazhungal endru

Male : Iruvarin kangalai santhikka vaippathu
Iraivanin naadaaga leelai
Idaiyinil varugindra
Nanmaiyum dheemaiyum
Manithargal seigindra velai

Female : Thaer kondu vanthaen
Silai mattum illai
Seer thantha veettil thunai mattum illai
Male : Uravukku endrum vayathaavathillai
Urimaikku endrum pirivenbathillai

Male : Vaanaththu chandhiran angirunthaalthaan
Iththanai kaaviyam undu
Female : Vaazhgindra vaazhvinil anbirunthaalthaan
Velli vizhaakkalum undu

Both : Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu
Vaazh naalellaam valamaanathu
Ivar vaazhvuthaan vaazhvenbathu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது

ஆண் : வாழ் நாளெல்லாம் வளமானது
இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது

ஆண் : சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது

பெண் : தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று
எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று
எல்லாமும் கோயில் எல்லாமும் தீபம்
எரிகின்ற தீபம் சிலர் கண்ட லாபம்
எரியாத தீபம் சிலர் செய்த பாவம்

பெண் : நாயகன் நாயகி பாவம் காண்பது
கோவிலில் காண்கின்ற காட்சி
நான் அதை கண்டேன்
வேறெதை சொல்வேன்
தடுக்கின்றதே மன சாட்சி

பெண் : சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது

ஆண் : வீட்டுக்கு வீடு தாகங்கள் உண்டு
வாழ்கின்ற வாழ்வில் ராகங்கள் உண்டு
ஆனந்த இராகம் பாடுங்கள் இன்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று

ஆண் : இருவரின் கண்களை சந்திக்க வைப்பது
இறைவனின் நாடக லீலை
இடையினில் வருகின்ற
நன்மையையும் தீமையும்
மனிதர்கள் செய்கின்ற வேலை

பெண் : தேர் கொண்டு வந்தேன்
சிலை மட்டும் இல்லை
சீர் தந்த வீட்டில் துணை மட்டும் இல்லை
ஆண் : உறவுக்கு என்றும் வயதாவதில்லை
உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை

ஆண் : வானத்து சந்திரன் அங்கிருந்தால்தான்
இத்தனை காவியம் உண்டு
பெண் : வாழ்கின்ற வாழ்வினில் அன்பிருந்தால்தான்
வெள்ளி விழாக்களும் உண்டு

இருவர் : சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளெல்லாம் வளமானது
இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here