Mana Koyil Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by Seerkazhi Govindarajan and P. Leela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : Seerkazhi Govindarajan and P. Leela

Music Director : S. Rajeswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Manakoyil unakkagavae swaami
Maravaamal unai kaanavae swaami
Malar kanai veesum madhana singaara
Maruvidavae vaaraai swaami
Manakoyil unakkagavae swaami
Maravaamal unai kaanavae swaami

Female : Aasai innavidhamaai irukkumendariyaen
Anbin valathanilae aga magizhndhen
Alai pol manamae nilaimaaridudhae
Anuraagha nilai kaanavae swaami
Manakoyil unakkagavae swaami
Maravaamal unai kaanavae swaami

Female : Kaadhalar iruvar karuthorumithae
Aadharavu pattadhae inbamendraar
Tamil vedhamae vaazhvin paadhai aagumae
Sodhanai innum yaeno swaami
Manakoyil unakkagavae swaami
Maravaamal unai kaanavae swaami

Male : Kanniyin aasaiyaal kaavalan
Kadamaiyai marandhaalae
Innalaal makkalum ighameedhil
Sughamizhandhu yenghi nindraar

Male : Mannanum raaniyai naadaamalae
Amaichar mugam paaramale
Pon nigarum naadu innilaiyil
Seerkedaai aanadhandro

Male : Un sugamae peridhaaga
Ennudhal muraiyoo amma
Mannuyir nilaimaiyai
Manadhaara enni neeyae
Thannalam paaraamal
Thiyagam seidhaal endrumae
Unnai pottruvaar
Ulaginil pugazh oongavae

Female : Un seviyil kelaadhadhaeno swaami
En seviyil veezhndhadhae kenjum kural osai
Un seviyil kelaadhadhaeno swaami
En seviyil veezhndhadhae kenjum kural osai
Arasae illaa naadu aniyaayamaai kaedu adainthaal
Makkalum avadhi padalaanar
Aagaaya veliyodu yeraala dheenakkural
Abayam bayam endrae alarudhae manna
Un seviyil kelaadhadhaeno swaami
En seviyil veezhndhadhae kenjum kural osai
Aagaaya veliyodu yeraala dheenakkural
Abayam bayam endrae alarudhae manna

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : மனக்கோயில் உனக்காகவே ஸ்வாமி
மறவாமல் உனைக் காணவே ஸ்வாமி
மலர் கணை வீசும் மதன சிங்காரா
மருவிடவே வாராய் ஸ்வாமி……
மனக்கோயில் உனக்காகவே ஸ்வாமி
மறவாமல் உனைக் காணவே ஸ்வாமி

பெண் : ஆசை இன்னவிதமாய் இருக்குமென்றறியேன்
அன்பின் வளதனிலே அக மகிழ்ந்தேன்
அலை போல் மனமே நிலைமாறிடுதே
அனுராக நிலை காணவே ஸ்வாமி…
மனக்கோயில் உனக்காகவே ஸ்வாமி
மறவாமல் உனைக் காணவே ஸ்வாமி

பெண் : காதலர் இருவர் கருத்தொருமித்தே
ஆதரவு பட்டதே இன்பமென்றார்
தமிழ் வேதமே வாழ்வின் பாதை ஆகுமே
சோதனை இன்னும் ஏனோ ஸ்வாமி..
மனக்கோயில் உனக்காகவே ஸ்வாமி
மறவாமல் உனைக் காணவே ஸ்வாமி

ஆண் : கன்னியின் ஆசையால் காவலன்
கடமையை மறந்ததாலே
இன்னலால் மக்களும் இகமீதில்
சுகமிழந்து ஏங்கிநின்றார்

ஆண் : மன்னனும் ராணியை நாடாமலே
அமைச்சர் முகம் பாராமலே
பொன் நிகரும் நாடு இந்நிலையில்
சீர்கேடாய் ஆனதன்றோ

ஆண் : உன் சுகமே பெரிதாக
எண்ணுதல் முறையோ அம்மா
மண்ணுயிர் நிலைமையை
மனதார எண்ணி நீயே
தன்னலம் பாராமல்
தியாகம் செய்தால் என்றுமே
உன்னை போற்றுவார்
உலகினில் புகழ் ஓங்கவே

பெண் : உன் செவியில் கேளாததேனோ ஸ்வாமி
என் செவியில் வீழ்ந்ததே கெஞ்சும் குரல் ஓசை
உன் செவியில் கேளாததேனோ ஸ்வாமி
என் செவியில் வீழ்ந்ததே கெஞ்சும் குரல் ஓசை
அரசே இல்லா நாடு அநியாயமாய் கேடு அடைந்தால்
மக்களும் அவதிப்படலானார்
ஆகாய வெளியோடு ஏராள தீனக்குரல்
அபயம் பயம் என்றே அலறுதே மன்னா…….
உன் செவியில் கேளாததேனோ ஸ்வாமி
என் செவியில் வீழ்ந்ததே கெஞ்சும் குரல் ஓசை
ஆகாய வெளியோடு ஏராள தீனக்குரல்
அபயம் பயம் என்றே அலறுதே மன்னா…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here