Paazhum Moodargal Song Lyrics is a track from Jaya Gopi Tamil Film – 1955, Starring V. Nagayya, G. Varalakshmi and Others. This song was sung by S. C. Krishnan and the music was composed by Viswanathan – Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singer : S. C. Krishnan
Music Director : Viswanathan – Ramamoorthy
Lyricist : Kannadasan
Male : Vaanagamae Kooraiyaaga
Vaiyagamae illamaaga
Thaayanbai izhantha paavi
Sanjalamae thunai kondaai
Male : Paazhum moodargal
Solvathu polae
Paapa jenmam neeyaa
Male : Paathagam seithidum
Veenar vaarththaiyaal
Thuyaram kolvathaeno
Thuyaram kolvathaeno
Male : Paazhum moodargal
Solvathu polae
Paapa jenmam neeyaa
Male : Theeyavar vaazhnthidum bhoomiyilae
Theeyavar vaazhnthidum bhoomiyilae
Un anbu nenjinai yaararivaar
Sooriya chanthirar jothiyin vadivae
Un ilaiya manathinilae
Thunbam yaenadaa…aa….aa…aa…
Male : Paazhum moodargal
Solvathu polae
Paapa jenmam neeyaa
Male : Patchi ainthu piraanigal yaavum
Parivudan kaakkum methinil
Patchi ainthu piraanigal yaavum
Parivudan kaakkum methinil
Unai kaaththidavae
Oru thunaiyum illaiyae
Anaathai jeevanai
Kaanpaarillaiyae
Idhuthaan ulagam idhayamillaiyae…
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : வானகமே கூரையாக
வையகமே இல்லமாக
தாயன்பை இழந்த பாவி
சஞ்சலமே துணைக் கொண்டாய்
ஆண் : பாழும் மூடர்கள்
சொல்வது போலே
பாப ஜென்மம் நீயா
ஆண் : பாதகம் செய்திடும்
வீணர் வார்த்தையால்
துயரம் கொள்வதேனோ
துயரம் கொள்வதேனோ
ஆண் : பாழும் மூடர்கள்
சொல்வது போலே
பாப ஜென்மம் நீயா
ஆண் : தீயவர் வாழ்ந்திடும் பூமியிலே
தீயவர் வாழ்ந்திடும் பூமியிலே
உன் அன்பு நெஞ்சினை யாரறிவார்
சூரிய சந்திரர் ஜோதியின் வடிவே
உன் இளைய மனதினிலே
துன்பம் ஏனடா….ஆஆஆ
ஆண் : பாழும் மூடர்கள்
சொல்வது போலே
பாப ஜென்மம் நீயா
ஆண் : பட்சி ஜந்து பிராணிகள் யாவும்
பரிவுடன் காக்கும் மேதினியில்
பட்சி ஜந்து பிராணிகள் யாவும்
பரிவுடன் காக்கும் மேதினியில்
உனைக் காத்திடவே
ஒரு துணையும் இல்லையே
அநாதை ஜீவனைக்
காண்பாரில்லையே
இதுதான் உலகம் இதயமில்லையே


