Vaai Thirandhu Song Lyrics is a track from Thanga Padhumai Tamil Film– 1959, Starring Sivaji Ganesan, M. N. Nambiyar, N. S. Krishnan, V. R. Rajagopal, R. Balasubramaniam, Padmini, M. N. Rajam, T. P. Muthulakshmi, T. R. Rajakumari, Lalitha, E. V. Saroja and Lakshmi Rajyam. This song was sung by P. Leela and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.
Singer : P. Leela
Music Director : Vishwanathan- Ramamoorthy
Lyricist : Pattukottai Kalyanasundaram
Female : Vaai thirandhu sollamma?
Vaai thirandhu sollamma?
Un magalin kadhai kaelamma
Thunbam karai kadanthu pona pinbum maunama?
Needhi murai kadantha neeyum pengal deivamaa
Vaai thirandhu sollamma?
Un magalin kadhai kaelamma
Thunbam karai kadanthu pona pinbum maunama?
Needhi murai kadantha neeyum pengal deivamaa
Vaai thirandhu sollamma?
Female : Madura thirunagaramadhira
Sigarathodu kuralum uyara
Marai kattravar padhara
Pori sidhariya naavengae
Madura thirunagaramadhira
Sigarathodu kuralum uyara
Marai kattravar padhara
Pori sidhariya naavengae
Female : Magara kodiyum
Kottravanin mani pon mudiyum
Kattodu mannil veezha pongiya manamengae
Magara kodiyum
Kottravanin mani pon mudiyum
Kattodu mannil veezha pongiya manamengae
Manamengae manamengae manamengae
Female : Kanniludhirum malar eduthu
Karppu naaril saram thoduthu
Ananiyae un kaal adiyil saattrinen
Kanniludhirum malar eduthu
Karppu naaril saram thoduthu
Ananiyae un kaal adiyil saattrinen
Female : Dhinam aalayathil anbu vilakaettrinen
Unnai nambi nambi endrum pottrinen
Indru oliyilandha kanavarodu nirkkiren
Unnai nambi nambi endrum pottrinen
Indru oliyilandha kanavarodu nirkkiren
Oliyilandha kanavarodu nirkkiren
Oliyilandha kanavarodu nirkkiren
Female : Sembum kallum deivam endru
Nambuvorgal pitharendru
Sithargal uraitha mozhi meithaano?
Sirpigal sedhukki vaitha
Sithira silaigalukkul
Devi vandhirupadhuvum poi thaano?
Female : Thani silambeduthu oorthazharpada
Sinatherindha sakthiyundena padaitha karvamoo?
Manaisugam keduthu kanmani sudarthanai parithu
Vaada vaithal nee valartha dharmamoo?
Amma ..amma..amma…amma….
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பெண் : வாய் திறந்து சொல்லம்மா?
வாய் திறந்து சொல்லம்மா?
உன் மகளின் கதைக் கேளம்மா
துன்பம் கரை கடந்து போன பின்பும் மௌனமா?
நீதி முறை கடந்த நீயும் பெண்கள் தெய்வமா
வாய் திறந்து சொல்லம்மா?
உன் மகளின் கதையைக் கேளம்மா
துன்பம் கரை கடந்து போன பின்பும் மௌனமா?
நீதி முறை கடந்த நீயும் பெண்கள் தெய்வமா
வாய் திறந்து சொல்லம்மா?
பெண் : பெற்றுதாவென்று வேண்டும்
மதுரைத் திருநகரமதிர
சிகரத்தோடு குரலும் உயர
மறை கற்றவர் பதறப்
பொறி சிதறிய நாவெங்கே
மதுரைத் திருநகரமதிர
சிகரத்தோடு குரலும் உயர
மறை கற்றவர் பதறப்
பொறி சிதறிய நாவெங்கே
பெண் : மகரக் கொடியும்
கொற்றவனின் மணி பொன் முடியும்
கட்டொடு மண்ணில் வீழப் பொங்கிய மனமெங்கே
மகரக் கொடியும்
கொற்றவனின் மணி பொன் முடியும்
கட்டொடு மண்ணில் வீழப் பொங்கிய மனமெங்கே
மனமெங்கே மனமெங்கே மனமெங்கே …
பெண் : கண்ணிலுதிரும் மலரெடுத்து
கற்பு நாரில் சரம் தொடுத்து
அன்னையே உன் காலடியில் சாற்றினேன்
கண்ணிலுதிரும் மலரெடுத்து
கற்பு நாரில் சரம் தொடுத்து
அன்னையே உன் காலடியில் சாற்றினேன்
பெண் : தினம் ஆலயத்தில் அன்பு விளக்கேற்றினேன்
உன்னை நம்பி நம்பி என்றும் போற்றினேன்
இன்று ஒளியிழந்த கணவரோடு நிற்கிறேன்
உன்னை நம்பி நம்பி என்றும் போற்றினேன்
இன்று ஒளியிழந்த கணவரோடு நிற்கிறேன்
ஒளியிழந்த கணவரோடு நிற்கிறேன்
ஒளியிழந்த கணவரோடு நிற்கிறேன்
பெண் : செம்பும் கல்லும் தெய்வமென்று
நம்புவோர்கள் பித்தரென்று
சித்தர்கள் உரைத்தமொழி மெய்தானோ?
சிற்பிகள் செதுக்கி வைத்த
சித்திரச் சிலைகளுக்குள்
தேவி வந்திருப்பதுவும் பொய்தானோ?
பெண் : தனிச் சிலம்பெடுத்து ஊர்தழற்படச்
சினத்தெரிந்த சக்தியுண்டெனப் படைத்த கர்வமோ?
மனைச்சுகம் கெடுத்து கண்மணிச் சுடர்தனைப் பறித்து
வாட வைத்தல் நீ வளர்த்த தர்மமோ?
அம்மா….அம்மா….அம்மா…..அம்மா….