Singers : K. J. Yesudas, P. Leela and M. L. Vasanthakumari
Music Director : S. Vedhachalam
Lyricist : T. K. Sundara Kannan
Male : Maaveran arjunanin
Manavaetkkai thaan arindhu
Madhavanum thaerinai
Iru saenai naduvae niruthinaar…….
Female : Anagmellaam sorndhu vaada
Adhodu naavum ularnthida
Anagmellaam sorndhu vaada
Adhodu naavum ularnthida
Endhan dhegam nadungudhae
Yedho mayakkam thaan aagudhae
Endhan dhegam nadungudhae
Yedho mayakkam thaan aagudhae
Female : Kaandeebam kai nazhuvudhae
Kanalaai udal erigindrathe
Kaandeebam kai nazhuvudhae
Kanalaai udal erigindrathe
Nirpadharkkum sakthiyillai
Nenjil alai pol suzhaludhae thollai
Nirpadharkkum sakthiyillai
Nenjil alai pol suzhaludhae thollai
Female : Edharkindha mana kalakkam
Idhuva veeranukku azhagu
Edharkindha mana kalakkam
Idhuva veeranukku azhagu
Anaikkadhu unnaiyae swargam
Avamaanandhaan arjunaa
Anaikkadhu unnaiyae swargam
Avamaanandhaan arjunaa
Female : Vendaenae swargam krishnaa
Vaendaen rajiya sugabhogamae
Uravodu edharkindha porae kesava
Ulagil nilaiyaai vaazhndhavar yaarae
Female : Uyirgalendrum azhivadhillai vijaya
Indha udal ellaam udainthu pona podhilum
Uttravarae aanaalum uyar dharmam kaakka
Thayangaadhae nee mayangaadhae
Female : Kulam azhiya vettri kodi naatti
Nilamadhai aalal nandramoo
Kodumai idhai arindha naanum
Por purivadhoo janaarthanaa
Female : Kadamaiyai ennum bodhu
Kalangida yedhu urimai
Dharmathin yuthanthaan endrum
Shakthriyanukku uriya kadamai
Male : Anadhimathyaandha manandha veeryam
Anandha baahu sasi soorya naethram
Basyaami thvaam deeptha hoodhasavasthram
Swadheshae vishwamidham dhabandham
Female : Uthamarai kaathidavae
Dhusttargalai azhithidavae
Ulaginile dharmathai nilai naattidave
Yugandhorum nanae avadharippenae….avadharippenae…
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ், எம். எல். வசந்தகுமாரி மற்றும் பி. லீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர கண்ணன்
ஆண் : மாவீரன் அர்ஜூனனின்
மனவேட்கை தானறிந்து
மாதவனும் தேரினை
இருசேனை நடுவே நிறுத்தினார்…….
பெண் : அங்கமெல்லாம் சோர்ந்து வாட
அதோடு நாவும் உலர்ந்திட
அங்கமெல்லாம் சோர்ந்து வாட
அதோடு நாவும் உலர்ந்திட
எந்தன் தேகம் நடுங்குதே
ஏதோ மயக்கம் தான் ஆகுதே
எந்தன் தேகம் நடுங்குதே
ஏதோ மயக்கம் தான் ஆகுதே
பெண் : காண்டீபம் கை நழுவுதே
கனலாய் உடல் எரிகின்றதே
காண்டீபம் கை நழுவுதே
கனலாய் உடல் எரிகின்றதே
நிற்பதற்கும் சக்தியில்லை
நெஞ்சில் அலைபோல் சுழலுதே தொல்லை
நிற்பதற்கும் சக்தியில்லை
நெஞ்சில் அலைபோல் சுழலுதே தொல்லை
பெண் : எதற்கிந்த மனக்கலக்கம்
இதுவா வீரனுக்கு அழகு
எதற்கிந்த மனக்கலக்கம்
இதுவா வீரனுக்கு அழகு
அணைக்காது உன்னையே ஸ்வர்க்கம்
அவமானந்தான் அர்ஜூனா…
அணைக்காது உன்னையே ஸ்வர்க்கம்
அவமானந்தான் அர்ஜூனா….
பெண் : வேண்டேனே ஸ்வர்க்கம் கிருஷ்ணா
வேண்டேன் ராஜ்ய சுகபோகமே
உறவோடு எதற்கிந்த போரே கேசவா
உலகில் நிலையாய் வாழ்ந்தவர் யாரே
பெண் : உயிர்களென்றும் அழிவதில்லை விஜயா
இந்த உடலமெல்லாம் உடைந்து போன போதிலும்
உற்றவரே ஆனாலும் உயர் தர்மம் காக்க
தயங்காதே நீ மயங்காதே
பெண் : குலமழிய வெற்றிக் கொடி நாட்டி
நிலமதை ஆளல் நன்றாமோ
கொடுமை இதை அறிந்த நானும்
போர் புரிவதோ ஜனார்த்தனா
பெண் : கடமையை எண்ணும் போது
கலங்கிட ஏது உரிமை
தர்மத்தின் யுத்தந்தான் என்றும்
க்ஷத்திரியனுக்கு உரிய கடமை
ஆண் : அனாதிமத்யாந்த மனந்த வீர்யம்
அனந்த பாஹூம் சசி சூர்ய நேத்ரம்
பஸ்யாமி த்வாம் தீப்த ஹூதாசவஸ்த்ரம்
ஸ்வதேசே விஸ்வமிதம் தபந்தம்
பெண் : உத்தமரைக் காத்திடவே
துஷ்டர்களை அழித்திடவே
உலகினிலே தர்மத்தை நிலை நாட்டிவே
யுகந்தோறும் நானே அவதரிப்பேனே…அவதரிப்பேனே
