Singer : K. J. Yesudas

Music Director : S. Vedhachalam

Lyricist : Maa. Raa.

Male : Idi idikuthu kaatradikuthu sathathilae
Idhai paarthu paarthu
Sirikudhu ulagam mothathilae
Kodiyavargalai podugindra sathathilae
Ulagam nilai maranthu
Aaduthu paar pithathilae

Male : Idi idikuthu kaatradikuthu sathathilae
Idhai paarthu paarthu
Sirikudhu ulagam mothathilae

Male : Solai endru vandhu vitten
Naanum ingae
Paalai idhu paavigal thaan
Makkal ingae
Solai endru vandhu vitten
Naanum ingae
Paalai idhu paavigal thaan
Makkal ingae

Male : Pazhathukullae valarnthazhikkum
Vandinai polae
Oru vandinai polae
Pazhagi nenjil valarnthazhithaal
Vanjagam thaanae

Male : Idi idikuthu kaatradikuthu sathathilae
Idhai paarthu paarthu
Sirikudhu ulagam mothathilae

Male : Odi sellum paravaigalae
Ondru solvaenஒன்று சொல்வேன்
Naadhiyattru naanum ingae
Irandhu vittaal
Odi sellum paravaigalae
Ondru solvaenஒன்று சொல்வேன்
Naadhiyattru naanum ingae
Irandhu vittaal

Male : Naaridaamal ennudalai
Thindru vidungal
Ennai kollaamal kondravarkku
Solli vidungal
Ennai kollaamal kondravarkku
Solli vidungal

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் 

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : மா. ரா

ஆண் : இடி இடிக்குது காற்றடிக்குது சித்தத்திலே
இதை பார்த்து பார்த்து
சிரிக்குதுலகம் மொத்தத்திலே
கொடியவர்கள் போடுகின்ற சத்தத்திலே
உலகம் நிலை மறந்து
ஆடுது பார் பித்தத்திலே

ஆண் : இடி இடிக்குது காற்றடிக்குது சித்தத்திலே
இதை பார்த்து பார்த்து
சிரிக்குதுலகம் மொத்தத்திலே

ஆண் : சோலை என்று வந்து விட்டேன்
நானும் இங்கே
பாலை இது பாவிகள் தான்
மக்கள் இங்கே
சோலை என்று வந்து விட்டேன்
நானும் இங்கே
பாலை இது பாவிகள் தான்
மக்கள் இங்கே

ஆண் : பழத்துக்குள்ளே வளர்ந்தழிக்கும்
வண்டினை போலே
ஒரு வண்டினைப் போலே
பழகி நெஞ்சில் வளர்ந்தழித்தாள்
வஞ்சகம் தானே

ஆண் : இடி இடிக்குது காற்றடிக்குது சித்தத்திலே
இதை பார்த்து பார்த்து
சிரிக்குதுலகம் மொத்தத்திலே

ஆண் : ஓடிச் செல்லும் பறவைகளே
ஒன்று சொல்வேன்
நாதியற்று நானும் இங்கே
இறந்து விட்டால்
ஓடிச் செல்லும் பறவைகளே
ஒன்று சொல்வேன்
நாதியற்று நானும் இங்கே
இறந்து விட்டால்

ஆண் : நாறிடாமல் என்னுடலை
தின்று விடுங்கள்
என்னை கொல்லாமல் கொன்றவர்க்கு
சொல்லி விடுங்கள்
என்னை கொல்லாமல் கொன்றவர்க்கு
சொல்லி விடுங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here