Pengale Ulaga Pengale Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “T. S. Bhagavathy” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”.
Singer : T. S. Bhagavathy
Music by : C. S. Jayaraman
Lyrics by : Udumalai Narayana Kavi
Pengalae ulaga pengalae
Pengalae ulaga pengalae
Pizhaigal seipavar aangalandro
Pizhaigal seipavar aangalandro
Azhaivai adaipavar neengalandro
Pengalae ulaga pengalae
Anbu manaviyar thaniththu varunthida
Arumai naayagar piriyalaamo
Andir paravaiyum pettaiyai pirinthaal
Arai nodiyilae uyirvidumo
Ennudamibil naan paathi manaivi paathi
Endru sollum aadavargal
Maru vinaadi thanmaiyilaa kovalangal
Aagindraar enna neethi
Inba unarve uyirin iyarkkai
Idhaiyum marnthaar aadavargal
Ponnai pol manaivi irukkaiyil
Pothu magal thunai naadugindraar
Pengalae ulaga pengalae
Pengalidam karpai edhirpaarkkum aangal
Pengalaiye karpazhiththu thiriyalaamo
Pengalukkum aangalukkum
Karppu podhuvandro
Konda manaiviyar theruvir sendraal
Kobam kondidum aangal yaarum
Kanda pengalai annai endre
Karuthi vaazhvathu kadamaiyandro
Oru pennai ainthu per naaduvathum
Oru paavi arupathaayiram pengal
Urimai parippathum sarithaano
Penninaththai thaazhththum sathiyandro
Irulil ullathu paazhum ulagam
Magalir vedhanai endru vilagum
Paruva maatharin urimai kaaththida
Ariya sevai puriya vendum
Pengalae ulaga pengalae
Pizhaigal seipavar aangalandro
Azhaivai adaipavar neengalandro
Pengalae ulaga pengalae….
பாடகி : டி. எஸ். பகவதி
இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்
பாடலாசிரியர் : உடுமலை நாராயண கவி
பெண் : பெண்களே உலகப் பெண்களே
பெண்களே உலகப் பெண்களே
பெண் : பிழைகள் செய்பவர் ஆண்களன்றோ
பிழைகள் செய்பவர் ஆண்களன்றோ
அழிவை அடைபவர் நீங்களன்றோ
பெண் : பெண்களே உலகப் பெண்களே..
பெண் : அன்பு மனைவியர் தனித்து வருந்திட
அருமை நாயகர் பிரியலாமோ
அன்றிற் பறவையும் பெட்டையைப் பிரிந்தால்
அரை நொடியிலே உயிர் விடுமே
பெண் : என்னுடம்பில் நான் பாதி மனைவி பாதி
என்று சொல்லும் ஆடவர்கள்
மறு வினாடி தன்மையிலாக் கோவலன்கள்
ஆகின்றார் என்ன நீதி...
பெண் : இன்ப உணர்வே உயிரின் இயற்கை
இதையும் மறந்தார் ஆடவர்கள்
பொன்னைப் போல் மனைவி இருக்கையில்
பொது மகள் துணை நாடுகின்றார்
பெண் : பெண்களே உலகப் பெண்களே..
பெண் : பெண்களிடம் கற்பை எதிர்பார்க்கும் ஆண்கள்
பெண்களையே கற்பழித்துத் திரியலாமோ
பெண்களுக்கும் ஆண்களுக்கும்
கற்புப் பொதுவன்றோ
பெண் : கொண்ட மனைவியர் தெருவிற் சென்றால்
கோபம் கொண்டிடும் ஆண்கள் யாரும்
கண்ட பெண்களை அன்னை என்றே
கருதி வாழ்வது கடமையன்றோ
பெண் : ஒரு பெண்ணை ஐந்து பேர் நாடுவதும்
ஒரு பாவி அறுபதாயிரம் பெண்கள்
உரிமை பறிப்பதும் சரிதானோ
பெண்ணினத்தை தாழ்த்தும் சதியன்றோ
பெண் : இருளில் உள்ளது பாழும் உலகம்
மகளிர் வேதனை என்று விலகும்
பருவ மாதரின் உரிமை காத்திட
அறிய சேவை புரிய வேண்டும்
பெண் : பெண்களே உலகப் பெண்களே..
பிழைகள் செய்பவர் ஆண்களன்றோ
அழிவை அடைபவர் நீங்களன்றோ
பெண் : பெண்களே உலகப் பெண்களே..